மீண்டும் முத்துவின் தலையில் கடனை கட்ட ப்ளான் போடும் மனோஜ்! உஷாரான குடும்பம்!

சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட் தொகுப்புகள்
 
siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் இன்றைய எபிசோட் சிறகடிக்க ஆசை தொடரில் செம சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து இருக்கின்றது. 

மனோஜ் அமைதியாக ஹாலில் சோகமாக உட்கார்ந்து இருக்க விஜயா என்னாச்சு எனக் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார். அப்போ ரோகிணி வீட்டுக்கு போனதையும் அவர் வீட்டில் சாப்பிட்டதையும் சொல்ல விஜயா கடுப்படித்து கொண்டு இருக்கிறார். 

பின்னர் ரோகிணி விவாகரத்துக்கு ஓகே சொல்லிவிட்டதாக சொல்ல விஜயா ஓவர் குஷியில் பேசுகிறார். ஆனால் அதை கொடுக்க அவர் கொடுத்த ஐந்து லட்சத்தை கொடுக்க வேண்டும் என்கிறார். முத்து அது என்ன நம்ம கொடுக்கணும்னு சொல்ற நீ. 

உன் கடனை நீ தான் அடைக்கணும் என்கிறார். மனோஜ் என்னம்மா இப்படி சொல்றான் எனக் கூற அண்ணாமலை அவன் சொன்னது சரி தான். உனக்காக தான அவ காசை கொடுத்தா நீ தான் தரணும் என்கிறார். முத்து வீடு விஷயத்தில் மனோஜ் செய்ததையும் சொல்கிறார். 

இப்போ நாங்க ஜெயிலில் இருந்ததுக்கு அவ காசு தரலை. உனக்கு தந்த காசுக்கு நீ தான் தரணும் என்கிறார். பின்னர் சத்யா கால் செய்ய அவரை பார்க்க வீட்டுக்கு போகிறார். 

அந்த நேரத்தில் ரேகா கால் செய்து தன்னை திருப்பதியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து இருப்பதாக சொல்கிறார். உடனே முத்து அப்போ நீ மயக்கம் போட்டுவிட்டதாக நடித்து மருத்துவமனையில் அட்மிட் ஆகு அப்போ உன்னை நாங்க கூப்பிட்டு வந்துவிடுவோம் என்கிறார். 

அதுபோல ரேகாவும் மயக்கம் போட இந்த விஷயம் அவர் அப்பாக்கு சொல்லப்படுகிறது. அவர் சிந்தாமணியிடம் சொல்ல இதில் என்னமோ பிரச்சனை இருப்பதாக சந்தேகப்படுகிறார். ரேகாவை மீட்க முத்து, மீனா ரெடி ஆகிவிட்டதால் சீக்கிரம் கல்யாணாம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web