சிந்தாமணிக்கு ஆப்படிக்க போகும் முத்து…. ரேகா சத்யா கல்யாண கலாட்டா ஸ்டார்ட்டா?

சிந்தாமணியின் வில்லத்தனத்தை தாண்டி ரேகா சத்யா கல்யாணம் எப்படி நடக்க போகிறது என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
 
siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் ரேகாவை அழைத்து வந்த முத்து மீனா அடுத்தக்கட்ட பற்றி சிந்திக்க தொடங்கி விட்டனர். 

பாட்டி வீட்டில் ரேகாவை பத்திரமாக சேர்த்து விட்டார் மீனா - முத்து. அதே நேரத்தில் ரேகாவின் அப்பா சிந்தாமணிக்கு கால் செய்து ரேகா காணாமல் போன விஷயம் குறித்து கூறிவிடுகிறார். ஆனால் அவர் தன் பொண்ணை எப்படி அழைத்து வர வேண்டும் என தனக்கு தெரியும் என்கிறார். 

வீட்டில் இருக்கும் முத்து, இந்த பிரச்சனையில் தன் குடும்பத்துக்கு எதுவும் ஆக கூடாது என்ற முடிவுடன் ரேகாவை ஒரு வீடியோ பேச சொல்கிறார். அதில் அவர் நான் சத்யாவை விரும்புவதாகவும், என்னை யாரும் கடத்தவில்லை. நானே விருப்பப்பட்டு தான் வந்தேன். 

சத்யாவை கல்யாணம் செய்துப்பேன் என பேசுகிறார். சட்ட சிக்கல் வராமல் இருக்க முத்து தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் முத்துவின் வீட்டுக்கு வரும் சிந்தாமணி என் பெண்ணை கடத்தி வச்சிருக்காங்க மீனாவும், முத்துவும். அனுப்புங்க இல்ல உங்களை சும்மா விடமாட்டேன் என டயலாக் விடுகிறார். 

அவரை காமெடியாக டீல் செய்து அனுப்பும் விஜயா பின்னர் முத்துவுடன் ஏன் இப்போ இந்த வேலைலாம் உனக்கு? நீனே கடனை கட்ட வழி தேடிட்டு இருக்க அத பாக்க வேண்டியது தானே என்கிறார். சிந்தாமணியால் தன் தொழில் பாதிக்கப்படும் என மனோஜ் புலம்புகிறார். 

தராதரம் என அவர் பேச கடுப்பாகும் மீனா அவர் மூக்கை உடைப்பது போல பதில் கொடுக்கிறார். பின்னர் இங்கிலீஷ் கிளாஸுக்கு போக இவர்களின் வீரதீர செயலுக்கு எல்லாரும் அப்ளாஸ் கொடுக்க முத்து சிரித்து கொள்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. 

From Around the web