காணாமல் போன மீனா… அதிரடியாக களமிறங்கிய முத்து… என்ன ஆனது?

சிறகடிக்க ஆசையில் சத்யாவின் கல்யாணம் பரபரப்பாக இருக்கும் என்று நினைத்த நிலையில் இன்றைய எபிசோட் அறுவையின் உச்சமாகி இருக்கிறது. 
 
siragadikka aasai

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் தொடக்கத்திலேயே கலவரமாக தொடங்கி இருக்கிறது. 

மீனா காணாமல் போன நிலையில் முத்து பரபரப்பாக தேடிக்கொண்டு இருக்கிறார். அவர் எங்கும் இல்லாமல் போக சிந்தாமணி கடத்திவிட்டாரோ என சந்தேகத்தில் அங்கு சென்று முத்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார். 

ஆனாலும் சிந்தாமணி நாங்க யாரையும் கடத்தலை. நாங்களே எங்க பொண்ணை காணும்னு தேடிட்டு இருக்கோம். ஒழுங்கா அவளை எங்க கிட்ட கொடுத்துரு என மிரட்டி கொண்டு இருக்கிறார். இதில் கடுப்பான முத்து அங்கிருந்து சென்று விடுகிறார். 

வீட்டுக்கு முத்து செல்ல அங்கு சரியாக மீனா இருக்கிறார். என்னவென்று விசாரிக்காமல் அவரிடமும் சத்தம் போடுகிறார். மீனா அவரை அமைதியாக உட்கார வைத்து சாப்பாடு போட்டுவிட்டு தான் பார்வதி ஆண்ட்டி வீட்டுக்கு போய்ட்டு வரப்ப லட்சுமி அக்கா பொண்ணுக்கு பிரசவ வலி வந்துட்டுப்பா.

அதனால் அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போய்ட்டு வந்தேன். போனில் சார்ஜர் இல்ல அதான் கூப்பிட்டு சொல்ல முடியலை என்கிறார். முத்துவும் அமைதியாகிவிடுகிறார். 

பின்னர் முத்துவை காண டிராவல்ஸ் அசோசியேஷனில் இருந்து வருகின்றனர். அவருடைய வளர்ச்சியை பாராட்டுகின்றனர். பின்னர் அவருக்கு உறுப்பினர் சேர்க்கை கிடைத்து இருப்பதாக சொல்லி அவரை சந்தோஷப்படுத்தி விட்டு செல்கின்றனர். இன்றைய எபிசோட் சம்மந்தமில்லாத கலவரமாக இருக்கிறது. 

From Around the web