மனோஜுக்கு இரண்டாவது பொண்டாட்டி ரெடி..! இது என்னடா புது ட்விஸ்ட்டா இருக்கு!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்
 
siragadikka aasai

விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்து இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. 

மனோஜின் ஷோரூமுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட கனகா மீண்டும் ஜூஸ் குடிக்கவே அங்கு வருகிறார். அவர் வந்து பொருட்களை சும்மா வேடிக்கை பார்க்க மனோஜும் அமைதியாக நிற்கிறார். மீண்டும் அவருக்கு ஜூஸ் வாங்க சந்தோஷ் செல்கிறார். 

அந்த பெண்ணின் அம்மா மனோஜை தனியாக அழைத்து என் பொண்ணுக்கு மனநலம் சரியில்லை. எவ்வளவோ ட்ரீட்மெண்ட் செஞ்சோம். சரியாகவே இல்ல. கல்யாணம் செஞ்சா சரியாகிடும்னு சொல்றாங்க. அதான் மாப்பிள்ளையை பாக்க வந்தேன் என்கிறார். 

யாரு மாப்பிள்ளை எனக் கேட்க நீங்க தான். உங்களுக்கும் டைவர்ஸ் ஆக போகுதுல என்கிறார். நீங்க யாரு என் வாழ்க்கையை பத்திலாம் யோசிட்டு இருக்கீங்களே எனக் கேட்க நாங்க பெரிய பணக்காரங்க கோடிக்கணக்குல சொத்து இருக்கு எல்லாம் என் ஒரே பொண்ணுக்கு தான் என்கிறார். 

இதனால் மனோஜ் யோசிக்க தொடங்க கனகா ஜூஸை குடிச்சிட்டு கிளம்பிவிடுகிறார். வீட்டில் இதுகுறித்து அவர் யோசித்து கொண்டு இருக்க அப்போது அடியாட்கள் வந்து முத்துவை கேட்டு அவரை அடிக்க பாய்கின்றனர். 

பின்னர் முத்து வந்து யார் நீங்க என சரமாரியாக அடிக்க அப்போ சிந்தாமணி வந்து என் பொண்ணு எங்கே என்கிறார். அவர் கணவரும் வந்து மீனாவை உன்னை நல்ல பொண்ணுனு நினைச்சேன். உனக்கு உதவுனேன். ஆனா நீ எனக்கு என்ன செஞ்சிருக்க எனக் கேள்வி கேட்கிறார். 

விஜயா என்னை அசிங்கபடுத்த நினைச்ச அதான் உனக்கு இப்படி நடக்குது என்கிறார். சிந்தாமணி மீண்டும் கடுப்பாகி அடிக்க சொல்ல முத்து எல்லாரையும் தடுத்து விடுகிறார். போலீஸுக்கு போங்க. உங்களால ஒன்னுமே பண்ண முடியாது என்கிறார். 

சத்தம் கேட்டு வெளியில் இருப்பவர்கள் வர சிந்தாமணி பிரச்சனை பெரிதாக வேண்டாம் எனக் கிளம்பிவிடுகிறார். தொடர்ந்து ரோகிணி விவாகரத்து கொடுக்கும் ஐடியாவில் இருக்கும் நிலையில் மனோஜும் காசுக்காக இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web