Siragadikka Aasai: சீதா காதலுக்கு தடை போடும் முத்து... சண்டைக்கு நிற்கும் மீனா.. என்ன நடக்க போகுதோ?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
சீதா வீட்டிற்கு அவரை பெண் கேட்டு வருகிறார் அருணின் அம்மா. அவரை அழைத்து உட்கார வைத்து பேச சீதா அம்மா எங்க மாப்பிள்ளை முடிவு தான் எல்லாமே. அவருக்கு பிடிக்கவில்லை என்றால் எங்களுக்கும் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார்.
எங்க மாப்பிள்ளை சொன்னா சரியா தான் இருக்கும் எனக் கூற அருண் அம்மா அவரால அருணுக்கு இரண்டு முறை சஸ்பெண்ட் ஆகி இருக்கு எனக் கூற அவர் ரொம்ப நல்லவரு என வாயை அடைக்கிறார் சீதாவின் அம்மா. அருணின் அம்மா சீதா கல்யாண விஷயமா அவர் தான் முடிவெடுக்கணும் என்கிறார்.
உடனே அருணின் அம்மா அதை முடிவெடுக்க வேண்டியது. உங்க மாப்பிள்ளை இல்ல சீதா என்கிறார். மீனா நான் பேசி இதை சரி செய்கிறேன் எனக் கூற சீதாவின் வாழ்க்கை முக்கியம் என்கிறார் அருணின் அம்மா. இருந்தும் சீதாவின் அம்மா அந்த முடிவை மாப்பிள்ளை தான் எடுக்கணும் எனக் கூறி விடுகிறார்.
இதனால் அருணின் அம்மா கிளம்பி விடுகிறார். அருண் வெளியில் என்ன ஆச்சு எனக் கேட்க அவங்க மாப்பிள்ளை சம்மதிக்கவில்லை என்றால் இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லை எனக் கூறி விட்டதாக சொல்கிறார். அருண் அவன் சம்மதிச்சு இந்த கல்யாணம் நடக்க வேண்டாம்.
இருந்தாலும் சீதா தான் என் பொண்டாட்டி. உங்க மருமகள் என தீர்க்கமாக சொல்லி விடுகிறார். பின்னர் சீதா சென்று முத்துவை சந்திக்கிறார். நான் தப்பான ஆளை காதலிக்க மாட்டேன் மாமா என்கிறார். உனக்கு என் மேல மரியாதை இருக்கா என முத்து கேட்க நாங்க வாழ்க்கையில் நிறைய பயந்து இருக்கோம்.
நீங்க வந்த பின்னர் தான் அந்த பயம் போச்சு என்கிறார். அப்போ இந்த பையன் வேண்டாம் எனக் கூற அவர் ரொம்ப நல்லவரு மாமா என்கிறார் சீதா. நீ லவ் பண்ணதால அப்படி சொல்ற. அவரை பத்தி எனக்கு தெரியும் எனக் கூறுகிறார். உன்னோட நல்ல புருஷனா இருக்க மாட்டாரு. நல்ல பையனை கட்டி வைக்க வேண்டியது என் பொறுப்பு என சீதாவை அனுப்பி விடுகிறார்.
மீனாவிடம் சென்று பேசுகிறார் அருண். எனக்கும் சீதாக்கும் நல்ல புரிதல் இருக்கு. இந்த கல்யாணத்தில் எங்க அம்மாக்கும் நல்ல மருமகளை தான் தேடுறேன். நீங்க எப்படி இருந்தீங்க. எவ்வளோ கஷ்டப்பட்டு இருக்கீங்க என எனக்கு தெரியும்.
சீதாவை நல்லப்படியா வச்சிப்பேன் எனக் கூற எனக்கும் அதில் ஆசை இருக்கு. ஆனா அவரு சம்மதிக்கணும் என்கிறார். உங்க புருஷனிடம் நானா வம்புக்கு போகலை எனக் கூறுகிறார். மீனா லைசன்ஸ் விஷயத்தில் நீங்க நியாயமா நடந்துக்கலை எனக் கூறுகிறார்.
வீட்டில் பேசுகிறேன் எனச் சொல்லி மீனா கிளம்பி விடுகிறார். முத்துவை வாசலில் பார்த்து அருண் சொன்ன விஷயத்தினை சொல்ல அவனுக்கு சீதா சரியில்லை. நல்ல பையனா நான் பார்த்து கட்டி வைக்கிறேன் எனக் கூறி செல்கிறார் முத்து. மனோஜை வெறுப்பேற்ற ரோகிணி யாரிடமோ பேசுவது போல நடிக்க அதை பாத்ரூமில் இருந்து ஒளிந்து நின்று கேட்கிறார் மனோஜ்.