Siragadikka Aasai: ஹீரோ, ஹீரோயினை விட வில்லிக்கு ஓவர் பில்டப்பா இருக்கே? இயக்குனர் ரோகிணி பக்கமா?

by Akhilan |
siragadikka aasai
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்த தொகுப்பு.

முதலில் பெண்களுக்கு தண்ணி குடத்தை தலையில் தூக்கி வைத்து வரும் போட்டி நடைபெறுகிறது. இதில் எல்லாரும் அவுட் ஆகிவிட ரோகிணி மற்றும் மீனா மட்டும் போட்டியில் இருக்கின்றனர். இதில் ரோகிணி வெளியேற மீனா வென்று விடுகிறார்.

தொடர்ந்து, ஆண்களுக்கு கையில் படாமல் முகத்தை நகர்த்தி பிஸ்கட் சாப்பிட வேண்டும். அப்படி நடக்கும் போட்டியில் எல்லாரும் வெளியேறிவிட முத்து வென்று விடுகிறார். பின்னர் எல்லாருக்குமான போட்டி நடக்கிறது. முதலில் இருவரின் காலை கட்டி நடக்க வைக்கின்றனர்.

அதில் மூன்று ஜோடிகளும் சண்டை போட்டுக்கொண்டே இருக்க கடைசியில் அவர்கள் தோற்றுவிடுகின்றனர். பின்னர், கணவர்களுக்கு கண்ணை கட்டி விட்டு மனைவி வழி நடத்த வேண்டும். அப்படி நடக்கும் போட்டியிலும் கூட முத்து, மீனா முதலில் சண்டை போட்டு போட்டியில் இருந்து வெளியேறிவிடுகின்றனர்.

தொடர்ந்து, மனோஜ் மற்றும் ரோகிணியும் தோற்று வெளியேறி விடுகின்றனர். ரவி மற்றும் ஸ்ருதி இருக்க என்ன நீ சொல்றீயா? என ரவிக்கேட்க ஸ்ருதி அவரை தவறாக வழிநடத்தி பல்ப் வாங்க வைக்கிறார். இதை தொடர்ந்து மூன்றாவது போட்டி நடக்கிறது.

அதில் மனைவிகளை ஐந்து நிமிடம் தூக்கி வைத்து நிற்க வேண்டும் என்கின்றனர். இந்த போட்டியில் ஜெயிச்சிடுவாங்க என பாட்டி சொல்ல அதுபோலவே சமாதானம் ஆகி போட்டியிலும் வெற்றி பெற்று விடுகின்றனர். வீட்டிற்கு வந்து விடுகின்றனர்.

பாட்டி பேரன்களின் தொட்டிலை வீட்டிற்கு எடுத்து வருகிறார். சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும் எனக் கூற ஸ்ருதி எனக்கு ஓகேதான். இவன்தான் ஒத்துக்கலை என்கிறார். இதில் ஷாக்காகும் எல்லாரும் ரவியை பார்க்க வாடகை தாய் முறையில் குழந்தை பெத்துக்க இருப்பதை கூறுகிறார் ஸ்ருதி.

விஜயா கோவப்பட பாட்டி அவரை அமைதிப்படுத்துகிறார். ஏன் மா இப்படி எனக் கேட்க வலியை என்னால் பொறுத்துக்க முடியாது என்கிறார். பாட்டி எல்லாருக்கும் இருக்க பயம் தான் என சமாதானப்படுத்துகிறார். ஸ்ருதி வேலை இருப்பதாக கூற ரவியை அழைத்துக்கொண்டு போய் விட சொல்கிறார்.

மீனாவின் டெக்கரேஷன் வேலையை கெடுக்க சிந்தாமணி டீம் பிளான் போட்டு கனவு கண்டு சந்தோஷப்படுகிறார். தொடர்ந்து ஆட்கள் வந்து பிரச்னை செய்ய ஆரம்பிக்க அவர்களை அடித்து துரத்தி விடுகிறார் மீனா மற்றும் அவர் தோழிகள். இதை தொடர்ந்து மீனாவின் டெக்கரேஷனை பார்த்த டிவி நடிகர் சூப்பரா இருப்பதாக கூறுகிறார்.

சிந்தாமணி டெக்கரேஷன் சரியில்லை எனக் கூறி அவர் பேமெண்ட்டில் இருந்து 2 ஆயிரத்தை குறைத்துவிடுகிறார். இதில் மீனா அவரை பார்த்து வாழ் வாழ விடு எனக் கூறிவிட்டு செல்கிறார். ரோகிணியும், மனோஜும் கோவிலுக்கு வர அங்கு மீனா அம்மா, சீதாவை முறைத்துவிட்டு செல்கின்றனர்.

போலீஸ்காரர்கள் வந்து வீடியோ வாங்க போக மனோஜை உள்ளே வர வேண்டாம் எனக் கூறி சென்று வாங்கிவிடுகின்றனர். அவர்களிடம் மனோஜ் வீடியோ கேட்க எதுக்கு என்கின்றனர். சோஷியல் மீடியாவில் போடலாம் எனக் கூற திருடன் தப்பிச்சிட மாட்டானா எனத் திட்டிவிட்டு செல்கிறார்.

Next Story