Siragadikka aasai: அசால்ட்டு காட்டும் ரோகிணி... என்ன சொன்னாலும் இந்த குடும்பம் நம்புதுப்பா!..

by Akhilan |
siragadikka aasai
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

ரோகிணி வீட்டில் ரெடியாக இருக்க மனோஜ் என்னாச்சு எனக் கேட்க ஒரு ஆர்டர் போகலாமா வேண்டாம என யோசித்து கொண்டு இருப்பதாக சொல்கிறார். நல்ல பேமெண்ட்டா இருந்தா போ என்கிறார். அந்த நேரத்தில் போலீஸ் வர முத்து யார் வேண்டும் என்கிறாஅர்.

அண்ணாமலையை அழைக்க பாஸ்போர்ட்டிற்கு போலீஸ் வெரிவிகேஷனுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். அவர் மற்ற விவரங்களை விசாரித்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் ப்ரவுன் மணி ரோகிணி சொல்லி கொடுத்த திட்டத்தை பேச வீட்டிற்கு வருகிறார்.

அவர் வருவதை பார்த்து விஜயா ஆச்சரியமாக கேட்க அப்பாவை ஜெயில வச்சு கொலை செய்து விட்டதாக கூறுகிறார். இதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைய இப்போதான் அவரை பார்க்க போகலாம் என பிளான் செய்துக்கொண்டு இருப்பதாக கூற இறுதி காரியத்துக்கு போகலாமா எனக் கேட்கிறார்.

இல்லை அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்டு சொல்லி அவங்களே அவரை அடக்கமும் செஞ்சிட்டாங்க என்கிறார். இதை கேட்டு நான் எங்க அப்பாவை பார்க்கணும். என்ன கூட்டிட்டு போங்க என ரோகிணி அழுது மயங்குவது போல நடிக்கிறார். (ஓவர் சீனால இருக்கு)

சொத்து குறித்து விஜயா கேட்க கேஸ் முடிஞ்ச பிறகு ரோகிணிக்கு வரும் என்கிறார். அவர் சென்று விட குடும்பத்தில் ஒருவருமே சந்தேக படாமல் ரோகிணியை நம்பி அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். (அடேய் இப்படி வெள்ளந்தியா இருக்கீங்களே)

இரவு மீனா வர முத்து அவருக்கு ரோகிணி மீது இருக்கும் சந்தேகம் குறித்து பேசுகிறார். இத்தனை நாள் இல்லாம நாம ஊருக்கு போக இரண்டு நாள அவர் எப்படி செத்ததா தகவல் வரும். எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த பார்லர் அம்மா என்னவோ பிளான் பண்ணுது ஆனா மாட்டாம பண்ணுது என்கிறார். (இந்த ஒரு பிள்ளைக்கு புத்தி இருக்கே)

விஜயா பார்வதியிடம் நடந்த விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டு இருக்க அங்கு சிந்தாமணி ஒரு பிளானுடன் டான்ஸ் கற்றுக்கொள்ள வருவதாக சொல்லி விஜயாவிடம் பேச்சு கொடுக்கிறார். விஜயாவுக்கு ஓவராக பில்டப் கொடுக்க அவர் மயங்கி விடுகிறார்.

தன்னுடைய பிசினஸ் குறித்து பேச பார்வதி மீனாவும் பிசினஸ் செய்வதை சொல்கிறார். அதற்கு விஜயா என் புருஷனோட மருமக என்கிறார். அவங்க அம்மா ஆக்சிடண்ட் தான் எங்களை பிடிச்சு ஆட்டுது என்கிறார். சிந்தாமணி இது போதும் எதிரியை உள்ளே வச்சு அடிக்கணும் என பிளான் போடுகிறார்.

ரோகிணி, பிரவுன் மணி, வித்யா பேசிக்கொண்டு இருக்க அங்கு மீனா வந்து விடுகிறார். என்ன ரோகிணி இப்படி பண்ணிட்டு இருக்கீங்க என அவர் உண்னையை கண்டு பிடிக்க ரோகிணி அதிர்ச்சி ஆகிவிடுகிறார். பிரவுன் மணி சமாளித்து விட்டு எஸ்கேப் ஆகிவிட ரோகிணி நான் சொல்றதை கேளுங்க மீனா என கெஞ்ச மீனா தான் வீட்டில் சொல்வேன் என்கிறார். ரோகிணி அவரை கொலை செய்ய கத்தியை தூக்கிக்கொண்டு வர அவர் கையை மீனா மடக்கி பிடித்து அடிக்கிறார். இதில் ரோகிணி அலறுகிறார். (நீங்களும் நம்பலைல. ஆமா, மீனா சந்திச்சதுலேந்து ரோகிணி கண்ட கனவாம் இது. )

தூங்கிக்கொண்டு இருந்த ரோகிணி அலற அவரை எழுப்பி சமாதானம் செய்கிறார் மனோஜ். பின்னர் வித்யாவிடம் நைட் நடந்த விஷயங்கள் குறித்து சொல்லிக்கொண்டு இருக்க அவர் அம்மாவிடம் அப்பா போட்டோவை எடுத்துக்கொண்டு வர சொல்கிறார். (இதுல ஆச்சும் ட்விஸ்ட்டு இருக்குமா)

Next Story