இன்னும் திருந்தல நீங்க… ரோகிணியின் திடீர் திட்டம்… அட அப்பா! இந்த பிள்ளைய மாட்டிவிடுங்க!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள் குறித்த விவரங்கள்.
சிந்தாமணி முத்துவிடம் கார் கற்றுக்கொள்ள வந்திருக்க அவருக்கு தான் சொல்லிக் கொடுப்பதாக முத்து கூறுகிறார். நீ இவளோட புருஷன் எனக்கு எப்படி ஒழுங்கா கத்துக் கொடுப்ப என சிந்தாமணி கேட்கிறார். என் தொழிலில் நான் உண்மையா தான் இருப்பேன் என்கிறார் முத்து.
அது மட்டுமில்லாமல் நீங்க மீனாக்கிட்ட தோத்து இந்த தொழிலில் இருந்து போய் டிரைவிங் ஸ்கூல் வைத்து பிழைத்து கொள்வதற்காக ஆவது நான் இதை கத்துக் கொடுக்கிறேன் என பேசுகிறார். இதில் கடுப்பாகும் சிந்தாமணி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
ரோகிணி மற்றும் வித்யா இருவரும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்று இருக்க அங்கு இவரை ஏமாற்றிய கதிரும் வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ரோகிணி வித்யாவிடம் தன்னுடைய அம்மா மற்றும் கிருஷ் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். சாப்பிட்டுவிட்டு கிளம்ப கதிரின் குரலை வைத்து ரோகிணி அவரை கண்டுபிடித்து விடுகிறார்.
உடனே அவரிடம் சென்று, பிராடு இந்த பணத்தை ஏமாத்திட்டு இங்கே இருக்க. ஒழுங்காக எண்ணி வை என சத்தம் போடுகிறார். ஆனால் கதிரோ தனக்கு இவர்களை தெரியாது என்பது போல் காட்டிக் கொள்ள ரோகிணி வித்யாவிடம் போலீசுக்கு போன் செய்யுமாறு கூறுகிறார்.
இதில் உஷாரான கதிர் ரோகிணியை தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். வித்யா மற்றும் ரோகிணி இருவரும் அவரை துரத்தியும் கண்டுபிடிக்க முடியாமல் சென்று விடுகிறது. வீட்டிற்கு வரும் ரோகிணி மனோஜிடம் இந்த உண்மையை போட்டு உடைக்கிறார்.
இதை கேட்கும் மனோஜ் இந்த முறையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார். அவை இந்த ஏரியாவில் தான் தைரியமாக சுத்திக் கொண்டிருக்கிறான். முத்து கண்டுபிடிப்பதற்கு முன் நாம் பிடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவனிடமிருந்து காசை வாங்க முடியாது என்கிறார் ரோகிணி.
போலீசுக்கு போகலாமா என கேட்க மனோஜ் அதெல்லாம் வேண்டாம் சாமியாரை பார்க்கலாம் என்கிறார். உடனே ரோகிணி பார்வதிக்கு கால் செய்து இந்த விஷயங்களை கூறி சாமியார் குறித்து கேட்கிறார். அடுத்த நாள் காலை பார்வதி சாமியாருடன் வீட்டிற்கு வருகிறார்.
வீட்டில் ரவி, ஸ்ருதி, முத்து மற்றும் மீனா இருக்க கதிரை பார்த்த விஷயத்தை சொல்லி அவரை கண்டுபிடிக்க தான் சாமியாரை வர சொல்லி இருப்பதாக கூறுகிறார். முத்து எனக்கு கால் செய்திருக்கலாமே என கேட்க உங்க உதவி எங்களுக்கு வேண்டாம் என்கிறார் ரோகிணி.
வந்திருந்த சாமியார் வெற்றிலையில் மை போட்டு வரிசையாக மனோஜிடம் காசு கறந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரவி மற்றும் முத்து நக்கலாக சிரிக்க ஸ்ருதி கலாய்த்து கொண்டிருக்கிறார்.