Siragadikka Aasai: விஜயாவின் லட்ச ரூபாய் வேலை… ஆப்படித்த மீனா…
சிறகடிக்க ஆசை தொடரின் கதைக்களம் டல்லடித்த நிலையில் தற்போது சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.
முத்துவின் காரில் இருந்து இறங்கி ஓடிய பெண் தற்போது மனோஜ் கடையில் ஜூஸ் சாப்பிட்டுவிட்டு அது வேணும் இது வேணும் என ஐந்து லட்ச ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்து ஆசைக்காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
அந்த கடுப்பில் மனோஜ் இருக்க அப்போ அங்கு வரும் ரோகிணி உங்க அம்மா என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டாங்க. நீ என்ன அமைதியா இருக்க அவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்கிறார். ஆனால் மனோஜ் எங்க அம்மா அதெல்லாம் கேட்க மாட்டாங்க.
உனக்கு அவங்கள பத்தி தெரியும் தானே. அவங்களுக்கு பதிலா நான் வேணா கேட்கிறேன் என்கிறார். அப்போதும் ரோகிணி பிடிவாதமாக அவங்களை நான் மன்னிப்பு கேட்க வைக்கிறேன் எனச் சொல்லிவிட்டு செல்கிறார்.
பின்னர் அந்த மனநிலை சரியில்லாத பெண்ணை முத்து கண்டுபிடித்து அவங்க அம்மாவிடம் ஒப்படைத்துவிடுகிறார். விஜயா டான்ஸ் கிளாஸுக்கு செல்கிறார். அங்கு இண்டர்வியூ நடந்து கொண்டு இருக்க அருகில் இருந்த பெண்ணிடம் எவ்வளவு சம்பளம் தருவாங்க என்கிறார்.
விஜயா நான் ஒரு ஐம்பதாயிரம் எதிர்பார்க்கிறேன் எனக் கூற அந்த பெண் கடுப்பில் ஒரு லட்சம் தருவாங்க என ஏற்றிவிட்டு செல்கிறார். இவரும் ஆசையில் போய் உட்கார அது மீனாவின் சங்கம் சார்பில் தொண்டு நிறுவனம் நடத்தும் கிளாஸ் என்றும் டீ பிஸ்கெட் மட்டுமே கிடைக்கும் எனக் கூற விஜயா கடுப்பில் கிளம்புகிறார்.
பின்னர் ஸ்ருதி ரவி ஹோட்டலுக்கு மாறுவேசத்தில் வரும் நீத்து அந்த ஹோட்டலை மூட வைக்க ப்ளான் போடுகிறார். அப்போது ரவியும் ஸ்ருதியும் ரொமான்ஸ் செய்து கொண்டு இருப்பதை பார்த்து கடுப்பாகிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
