காணாமல் போன ஸ்ருதி… விஜயாவை டான்ஸ் ஆடவிட்டே சமாளித்த ரவி… நடத்துங்கோ?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய எபிசோட்டின் தொகுப்புகள்.
ரவி மற்றும் ஸ்ருதியின் கல்யாண நாள் விழாவிற்கு எல்லாரும் வர ரவி பதற்றமாக இருக்கிறார். ஸ்ருதி எங்கே எனக் கேட்க அவர் வந்துவிடுவார் என சமாளிக்கிறார். செல்வம் வர பயப்படாத ரவி. முத்து போய் இருக்கேன் தானே. அழைச்சிட்டு வந்துடுவான் எனக் கூறி அவருக்கு ஆறுதல் தருகிறார்.
இருந்தும் ரவி பயந்துக்கொண்டே இருக்கிறார். உடனே விஜயாவை ஆட சொல்ல அவர் தன்னுடய பரதநாட்டியம் டான்ஸ் பிள்ளைகளை ஆட சொல்லுகிறார். அவர்கள் ஆடி முடிக்க ரவி விஜயாவை ஆட சொல்லுகிறார். அவர் நான் ஆட ஸ்ருதி வரட்டும் எனக் கூற ரவி இல்லை அம்மா நீங்க ஆடுங்க என அவரை ஆட வைக்கிறார்.
இதை பார்க்கும் ஸ்ருதியின் பெற்றோர் கடுப்பாகின்றனர். இந்த பொம்பளைக்கு இது தேவையா என்கிறார். உடனே வாசுதேவன், அண்ணாமலையிடம் உங்க பொண்டாட்டி நல்லா டான்ஸ் ஆடுறாங்களே. அவங்கள வச்சு நீங்க பெரிய லெவல் போகிடலாம் என்கிறார்.
அண்ணாமலை அவ திறமைல நான் முன்னேறனும் இல்ல. நான் சுயமா உழைச்சு தான் என் பிள்ளைகளை வளர்த்திருக்கேன் என்கிறார். ஸ்ருதியின் அப்பா மற்றும் அம்மா கோபமாக இருப்பதை பார்த்த ரவி அவர்களையும் ஆட அழைக்கிறார். அவர் வற்புறுத்தி கூப்பிட ஸ்ருதியின் அம்மா மட்டும் செல்கிறார்.
தற்போது அண்ணாமலை வாசுதேவனிடம் உங்க மனைவியும் தான் நல்ல ஆடுறாங்க. அவங்க திறமையை வச்சு நீங்களும் பெரிய லெவலுக்கு போகலாம் என நோஸ்கட் கொடுக்கிறார். மீனா மற்றும் முத்து ஸ்ருதியை தேடி அவருடைய டப்பிங் ஸ்டூடியோவிற்கு செல்கின்றனர்.
அவர் வந்தாரா என கேட்க லீவ் சொல்லிவிட்டதாக கூறிவிடுகிறார். வேறு எங்காவது டப்பிங் பேசுவாங்களா எனக் கேட்க இன்னொரு ஸ்டூடியோ அட்ரஸ் கொடுத்து அனுப்பிகின்றனர். அங்கு தேடி வர அவர் பேசிவிட்டு சென்றுவிட்டதாகவும் வக்கீல் நம்பரை வாங்கிக் கொண்டு சென்றதாகவும் அவர்களும் தகவல் சொல்லுகின்றனர்.
மண்டபத்தில் அண்ணாமலையை பேச சொல்ல அவரும் தன்னுடைய பிள்ளைகள் குறித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து மீண்டும் விஜயாவை ஆட கூறி எல்லோரும் ஒன்ஸ்மோர் கேட்கின்றனர். இதை பார்க்கும் ஸ்ருதியின் அப்பா மற்றும் அம்மா ரவியை அழைத்து என்ன ஆனது என அவரிடம் விசாரிக்கின்றேனர்.