Siragadikka Aasai: முத்துவை காலி செய்ய நடக்கும் சதி… ரோகிணியின் கூட்டு அம்பலப்பட போகும் ரகசியம்…

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
முத்து ஆசிரமத்துக்கு துணிகள் கேட்டு கொண்டு இருக்க விஜயா என் புடவையை யாருக்கும் தர முடியாது என்கிறார். அவருக்கு சப்போர்ட்டாக ரோகிணி பேச கடுப்பான விஜயா உன்னை எனக்காக பேச சொன்னேனா? உன் வேலையை மட்டும் நீ பாரு எனக்காக பேச தேவையில்லை என்கிறார். பின்னர் மனோஜிடம் பேச அவரும் திமிராக பேசுகிறார்.
முத்து நம்ம இன்னொருத்தர் உதவியோட தான் இருக்கோம். ஏன் மூச்சு காத்து கூட மரம், செடி கொடிகளில் இருந்து தான் வருது என்கிறார். உடனே ஸ்ருதி சரிதான். நான் போய் என்னுடைய டிரெஸ் எடுத்துட்டு வரேன் என செல்கிறார். இதை பார்க்கும் ரோகிணி கடுப்புடன் நிற்கிறார்.
சிட்டி தன்னுடைய ஆட்களை அழைத்து நான் சொல்ற மாதிரி செய்யுங்க. அவன் பிரேக் ஒயரை கட் செஞ்சிட்டோம். ஆனா ஆயில் புல்லா இறங்கணும். அப்போதான் நம்ம நினைச்சது நடக்கும். நீங்க என்ன செய்றீங்கனா அவன் வீட்டுக்கு பக்கத்தில நில்லுங்க.
அவனை பாலோ செஞ்சி காரை ஒரசுங்க. அப்போ அவன் ஸ்பீட்டா வருவான். அதனால் பிரேக் பிடிக்காம போய் அவன் எதும் பண்ணாலும் சரி அவனுக்கு எதுவும் ஆனாலும் சரி என்கிறார் சிட்டி. மறுபக்கம் துணிகளுடன் கீழே வருகின்றனர் முத்து மற்றும் மீனா.
இரண்டு பேரும் டிக்கியில் பொருளை வைத்துக்கொண்டு இருக்க அதை மேலே இருந்து ரோகிணி பார்க்கிறார். மீனாவின் தோழிகள் வர அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். முத்துவும் ஆயில் லீக்கை பார்க்காமல் போன் வர அதில் பேசிக்கொண்டு இருக்கிறார்.
பின்னர் மாடிக்கு டிபன் செய்ய வர அப்போது ஸ்ருதி சமைத்து கொண்டு இருக்கிறார். என்ன செய்றீங்க என மீனா கேட்க சமையல் கத்துட்டு இருக்கேன் என்கிறார். நான் உதவி செய்யவா எனக் கேட்க வேண்டாம் என்கிறார். வெளியில் வரும் மீனா, இதை முத்துவிடம் சொல்ல ஸ்ருதி சமைக்கிறது தெரிஞ்சு அங்கு ஓடுகிறார் ரவி.
நான் செய்றேன் என ரவி கூற வேண்டாம் நீ போ நானே செஞ்சிக்கிறேன் என்கிறார். அவரும் வழி இல்லாமல் வந்து அமர ஸ்ருதி எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறார். உப்புமாவை பாடுபட்ட தட்டில் போடும் போதே எல்லாருக்கும் பயம் வந்து விடுகிறது.
பின்னர் ஸ்ருதி சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து நல்லா இருக்கு எனக் கூறி விடுகின்றனர். ஆனால் ரவி உண்மையை சொல்லி விடுகிறார். உடனே விஜயா நம்ம செஞ்சத நம்மளே செஞ்சி சாப்பிடணும் எனக் கூற ரவி ஸ்ருதிக்கு ஊட்டி விட சாப்பிடும் ஸ்ருதி முகம் சுழிக்கிறார்.
சரி பொறுமையா சமையல் கத்துக்கோ என்கிறார். உடனே விஜயா அவளிடம் சமையல் கத்துக்கோ ஆனா திமிர் ஜாஸ்தி அத கத்துக்காத. சிலரிடம் பொய் பேசும் திறமை இருக்கு அந்த பக்கம் போகாதே என்கிறார். முத்துவின் கார் மீது முட்டை வியாபாரி மொத்த முட்டையை உடைத்து விடுகிறார்.
ஆனால் அவர் அப்படியே செல்லாமல் வந்து உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கிறார். முத்து கோபப்பட அவரை சமாதானம் செய்கிறார் மீனா. உங்களுக்காது லேட் தான் ஆகும். அவருக்கு வருமானமே போச்சே என்கிறார். முத்துவும் அமைதியாக இருக்கிறார்.