மனசாட்சி இல்லாமல் விஜயா கேட்கும் விஷயம்… எம்மா நீயெல்லாம் தாயா? பேயா?

சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜுக்கு இரண்டாம் கல்யாணம் கன்பார்மா நடக்குமா என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும். 
 
siragadikka aasai

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் சத்யாவின் கல்யாண விசேஷம் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் மனோஜின் இரண்டாவது கல்யாணம் சம்பவமும் தொடர துவங்கி இருக்கிறது.

விஜயாவை பார்வதி வீட்டில் சந்திக்கும் ரோகிணி தான் டைவர்ஸ் தர தயாராக இருக்கிறேன். ஆனால் மனோஜ் ஜெயிலில் இருந்தபோது தான் கொடுத்த ஐந்து லட்சம் உடனே வேண்டும் என கேட்கிறார். நீ முதலில் கையெழுத்து போடு நான் தருவதாக விஜயா கூறுகிறார்.

ஆனால் ரோகிணி உங்களை நம்ப முடியாது. நீங்கள் காசை வைத்த உடனே நான் கையெழுத்தும் போடுகிறேன் என்கிறார். இதனால் கோபத்தில் விஜயா உடனே காசு ரெடி செய்து தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

மனோஜை சந்தித்து இந்த விஷயத்தை கூற அவரும் பணத்தை ரெடி செய்துவிடலாம் என கனகா பற்றி மீண்டும் பேசுகிறார். ஆனால் விஜயா அந்த பெண் வேண்டாம் என கூறிவிட்டு செல்கிறார். ஆனால் மனோஜிற்கு பெயர் வைத்த நியூமராலஜிஸ்ட் கனகாவை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்.

 வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ள அவருக்கு ஐடியாவும் கொடுத்து விடுகிறார். இதனால் மனோஜ் இரண்டாம் கல்யாணத்தை வீட்டில் சொல்லாமல் செய்ய முடிவெடுக்கிறார். அதே நேரத்தில் வீட்டிற்கு வரும் விஜயா குடும்பத்தினரிடம் மனோஜிற்காக 5 லட்சம் பணம் கேட்கிறார்.

யார் கொடுப்பார்கள் என அண்ணாமலை கேட்க முத்து மற்றும் மீனா பெயரை சொல்ல அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். மனோஜ்க்கு தானே டைவர்ஸ் வேணும். அவனை தர சொல்லுங்க எனக் கூற கூட பொறந்தவனுக்கு ஒரு பிரச்சனையில ஹெல்ப் பண்ண கூட மனசு வரமாட்டேங்குது என விஜயா தொடர்ந்து மனசாட்சி இல்லாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். இதனால் அங்கிருந்த அவர்கள் விஜயாவை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது. 

From Around the web