Siragadikka Aasai: புதிதாக வந்த சமையல்காரி… விஜயாவை அலற விட்ட அதிரடி சம்பவம்!

by AKHILAN |
Siragadikka Aasai: புதிதாக வந்த சமையல்காரி… விஜயாவை அலற விட்ட அதிரடி சம்பவம்!
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சீதாவின் ரிஜிஸ்டர் மேரேஜ் விஷயத்தை முத்துவிடம் மறைத்ததால் அவர் மீனாவிடம் கோபமாக இருக்கிறார். இதனால் அவரை தன்னுடைய வீட்டிற்கு வரக்கூடாது என முத்து வெளியில் அனுப்பி விட்டார். இது முத்துமீனா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒரு பக்கம் என்றால் இந்த பிரிவு இன்னொரு வகையில் சுவாரசியமான டிஆர்பியை அதிகரிக்கும் என்ற பேச்சுக்களும் இருந்துள்ளது. ஏனெனில் இதுவரை முத்துவின் வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் மீனாதான் செய்து வந்தார்.

தற்போது அவர் வெளியேறிவிட்ட நிலையில் ஏற்கனவே ரோகிணியை விஜயா கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு தான் அந்த வேலை செய்ய விஜயா கூறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே, ரோகிணியை காபி போட சொல்லி இருந்தார்.

ரோகிணியின் காப்பியை குடித்து விட்டு விஜயா திட்டி விட்டும் சென்றார். இந்நிலையில், அடுத்து சமையல் வேலை தன் மேல் விழுந்து விடுமோ என்ற பயத்தில் ரோகிணி ஒரு வேலைக்காரியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவர் சமையல் வேலையை பார்த்துக் கொள்வார் எனக் கூற விஜயாவும் ஒப்புக்கொள்கிறார்.

அவர் சமைத்து எல்லோரிடமும் பரிமாற ஒரு பருக்கை கூட மிச்சம் ஆகாது எனக் கூற ஒரு வாயை எடுத்து வைத்த உடனே எல்லோரும் அலறியடித்துக் கொண்டு வாயைக் கழுவ ஓடிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் அண்ணாமலை விஜயாவிடம் இருக்கும் போது ஒருத்தர் அருமை இல்லாத போதுதான் புரியும் என்கிறார்.

அதற்கு ஆமாம் அப்பா எனக் கூற அண்ணாமலை உனக்குதான் என்கிறார். இதனால் மீனா இந்த வாரத்தில் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்படுவார். முத்துவிற்கு கோபமாக இருந்தால் கூட வீட்டு வேலைகளுக்கு மீனா தேவைப்படுவார் என்பதால் இதை விஜயாவே செய்ய வாய்ப்பு இருக்கிறது.

சீதாவின் கணவர் அருண், முத்துவின் மீது வஞ்சத்தை வளர்த்துக் கொண்டிருப்பதால் இது சீரியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி டிஆர்பியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. வரும் வாரத்தில் மேலும் பல சுவாரசிய நிகழ்வுகள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story