விவாகரத்து செய்யாமலே இரண்டாவது கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்யும் மனோஜ்!
மனோஜ் கனகாவை பார்க்க வந்து இருக்கிறார். அவர் அம்மா டைவர்ஸ் விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். கனகா என்னை வெளியில் கூட்டிட்டு போ என நச்சரித்து கொண்டு இருக்கிறார். இந்த முறை மாட்டிக்கிட்ட கூடாதுனு மனோஜ் நைசாக மறுத்துவிடுகிறார்.
பின்னர் கனகா அம்மா அவரை அனுப்பிவிட்டு இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். மனோஜ் அதெல்லாம் முடியாது. விவாகரத்தே ஆகவில்லை. அதுக்கெல்லாம் நிறைய புரொசிஜர் இருக்கு என அடம் பிடிக்கிறார்.
ஆனால் கனகாவின் அம்மா எனக்கு தெரிஞ்சவங்களை வச்சு எல்லாம் முடிச்சிட்டேன். எந்த பிரச்சனையும் வராது. உங்க பேச்சை என்னால் நம்பமுடியலை. என் பொண்ணுக்கு பாதுகாப்பா இருக்கதை தான் நான் யோசிக்க முடியும் என முடிவாக பேசிவிடுகிறார். இதனால் மனோஜ் மறுக்க முடியாமல் போகிறது.
சத்யா மற்றும் ரேகா இருவரும் வர சிந்தாமணி புது ப்ளான் போடுகிறார். அதில் ரேகாவின் அப்பா மருத்துவ சிகிச்சைக்காக கேரளா செல்ல இருப்பதால் மொத்த பிசினஸையும் சத்யா தான் பாத்துக்க வேண்டும் எனக் கூறுகிறார். அதற்காக அவருக்கு டிரைவர், பிஏ தருகிறார்.
பின்னர் சத்யா மற்றும் ரேகா இருவரும் கிளம்ப சிந்தாமணியிடம் இவங்க இங்கையே தங்க நீதான் எதாவது பண்ணனும் எனக் கூறிவிடுகிறார். தொடர்ந்து மீனா மற்றும் முத்து இருவரும் தங்களுடைய ரூம் அனுமதிக்காக ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து இருக்கின்றனர்.
அந்த நேரம் பார்த்து சரியாக மனோஜ் மற்றும் கனகாவின் பதிவு திருமணத்துக்காக அங்கு வருகின்றனர். ஆபிஸில் இருவரும் மாலை மாத்தி பதிவு திருமணம் செய்து கொள்கின்றனர். அதே இடத்தில் முத்து வேற இருக்க என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.