பப்பரப்பா மனோஜின் இரண்டாவது கல்யாணம்… இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கும் போலயே!

மனோஜ் பொய் எப்போதுமே ரொம்ப நாள் தாங்காது என்பதால் சீக்கிரம் தீபாவளி காத்திருக்கு
 
siragadikka aasai

சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

 மனோஜ் தன்னுடைய குடும்பத்திலிருந்து ரவி மற்றும் முத்து இருவரும் கல்யாணத்தில் இருப்பதால் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில் கனகாவின் அம்மா வந்து என்ன பிரச்சனை என கேட்கிறார்.

சந்தோஷ் அவரிடம் உண்மையை சொல்லும் விதமாக ரவி மற்றும் முத்து இருவரும் மனோஜின் தம்பிகள் என்பதை உடைத்து விடுகிறார். இதனால் கனகாவின் அம்மா ஐயரை இன்னும் சில மணி நேரம் இழுக்க சொல்லிவிட்டு லாபகமாக பேசி நால்வரையும் வெளியேற்றுகிறார்.

 அதே நேரத்தில் ரவி மற்றும் ஸ்ருதி இருவதும் உடனடியாக கிளம்பி விடுகின்றனர். அந்த நேரத்தில் மனோஜை மணமேடைக்கு அழைத்து வர செல்கின்றனர். ஆனால் வாசல் வரை சென்ற முத்து திடீரென வீட்டிற்குள் நுழைகிறார்.

 ஆனால் இதை முன்கூட்டியே பார்த்த மனோஜ் உடனே பக்கத்தில் இருக்கும் ரூமிற்குள் சென்று விடுகிறார். கனகாவின் அம்மா என்னவென்று அவரிடம் விசாரிக்க மீனாவின் பர்ஸை வைத்து விட்டு சென்றதாக கூறுகிறார்.

 ஒருவழியாக முத்துவும் கிளம்பி விட, மனோஜ் மற்றும் கனகாவின் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. எந்தவித பரபரப்பும் பிரச்சினையும் இல்லாமல் கனகாவின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார் மனோஜ். இதைத்தொடர்ந்து இருவரும் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்கின்றனர்.

 ஆனால் அதே கோயிலில் விஜயா மற்றும் பார்வதி இருவரும் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க மனோஜ் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்கிறார். கண்டிப்பாக இந்த விஷயம் விரைவில் வீட்டில் உடையும் என்பதால் அடுத்த கட்ட பரபரப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது.

From Around the web