சின்னத்திரை ஹீரோ to டெலிவரி பாய்!.. நடிகருக்கு நேர்ந்த சோகம்!...

Actor: சீரியல்களில் ஹீரோவாக நடித்து வந்த தேவ் தன்னுடைய அடையாளத்தினை இழந்து இருப்பது தான் செய்யாத தப்பால் என மனம் வருந்தி பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் ஹீரோவாக நடித்து வந்த முக்கிய நடிகர்களில் சஞ்சீவ், ஸ்ரீ, தீபக், தேவ் உள்ளிட்டோர் இருந்தனர். அதில் மற்ற நடிகர்கள் இன்னும் ஹீரோ ரோல் நடித்து வரும் நிலையில் தேவ் மட்டும் தன்னுடைய ஹீரோ வாய்ப்பை இழந்து துணை ரோல் பண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய நண்பர்கள் தற்போது ஹீரோவாக நடிப்பது எனக்கு சந்தோஷம் தான். அதில் வருத்தம் இல்லை. எனக்கு ஒரு கதை வரும் போது அது தவறினால் என்னுடைய நண்பர்களுக்கு சொல்லிவிடுவேன். இவ்வளவு சம்பளம் கேட்டேன். அதை விட அதிகமா கேள் என்று தான் பேசிக்கொள்வோம்.
வெங்கட் பிரபு என்னுடைய நெருங்கிய நண்பர். அவரிடம் வாய்ப்பு கேட்டேன். அவர் வரும் போது தரேன் எனக் கூறிவிட்டார். அவ்வளவுதான். வேறு என்ன நாம் செய்ய முடியும். ஒருவருடைய இறப்புக்கு யாரும் எதுவும் பண்ண முடியாது. என்ன நடந்தது என்பது எங்க இரண்டு பேருக்கு தான் தெரியும்.

அவங்க இல்லை. நான் இப்போ சொன்னால் நம்ப மாட்டார்கள். அவர் இறந்துவிட்டார். இனி என்னால் அவரை அழைத்து வர முடியாது. நான் நிரபராதி என்று வெளியில் வந்த போது கூட என்னுடைய நண்பர்கள் என்னை குறித்து பேசியவர்கள் மீது அவதூறு வழக்கு போடலாம் என்றனர். ஆனால் நான் எல்லாம் முடிஞ்சிட்டு இனி பேசி என்ன ஆக போகுது என்று கூறிவிட்டேன்.
எனக்கு குழந்தை இல்ல. என்னுடைய சகோதரர் பையன் என்னுடன் தான் சின்ன வயதில் இருந்து வளர்ந்து வருகிறான். ஒரு கட்டத்தில் என் அப்பா இறந்தவுடன் வெளியில் வர வேண்டிய நிலை சொந்த வீட்டில் இருந்து 3 ஆயிரம் வாடகைக்கு வந்தேன். ஒரு வருடம் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்தோம்.
காசில்லாத நேரத்தில் என் மனைவி சப்பாத்தி போட்டு கொடுத்தார். அதை ஆள் வைத்து ஒரு நாள் டெலிவரி செய்தேன். ஆனால் அது கட்டுப்படியாகாமல் நானே டெலிவரி செய்ய தொடங்கினேன். தினமும் என் சீரியல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு டெலிவரியை செய்து வந்தேன். பின்னர் எங்க வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறி இந்த இடத்துக்கு வந்துள்ளேன். சின்னத்திரையை விட்டால் நான் செத்து விடுவேன் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.