விஜய் டிவியின் பிரபல ஜோடி… ரெடியான சூப்பர் சீரியலின் அப்டேட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே எக்கசக்கமான ரசிகர் பட்டாளம் அதிகம். அந்த வகையில் இந்த பட்டியலில் அடுத்த சீரியலின் அறிவிப்பும் வெளியாகி விட்டது.
டப்பிங் சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த விஜய் டிவி சமீப வருடங்களாக ஒரிஜினல் கதைகளை இயக்கி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த லிஸ்ட்டில் சில சீரியல்கள் மாஸ் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் பல சீரியல்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்தும் இருக்கின்றனர்.
முக்கியமான சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியல் பல ஆண்டுகள் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றது.
தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாண்டியன் கேரக்டரில் ஸ்டாலினும், கோமதி கேரக்டரில் நிரோஷாவும் நடித்து வருகின்றனர். இரண்டாம் பாகத்தில் அப்பா மகன் பாசத்தினை கதைக்களமாக கொண்டு இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த சீரியல் டிஆர்பியில் முக்கிய இடம் பிடித்து இருக்கிறது. தற்போது இந்த ஸ்டாலின் மற்றும் நிரோஷா நடிப்பில் இன்னொரு சீரியலையும் விஜய் டிவி களமிறக்கி இருக்கிறது. இது ஹோட்டல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
லட்சுமி மெஸ்ஸின் உரிமையாளர் கந்தசாமி கேரக்டரில் ஸ்டாலின், அவர் எம்ப்ளாயியாக லட்சுமி கேரக்டரில் நிரோஷாவும் நடிக்க இருக்கின்றனர். மேலும் இந்த முறையும் நிறைய கேரக்டர் சீரியலில் இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
