அன்னம் பிரச்னை… கயலுக்கு சிக்கல்… அவமானப்படும் நந்தினி… ஆதிரையின் வைராக்கியம்.. பயத்தில் ஆனந்தி

by Akhilan |
சன் சீரியல்கள்
X

சன் சீரியல்கள்

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் 5 டிஆர்பி சூப்பர் ஹிட் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ அப்டேட்டுகளின் தொகுப்புகள்.

அன்னம்

அன்னத்தின் மாமா, ’இந்த மாமா உடம்புல உசுரு இருக்க வரையும் உன்கிட்ட தூசு துரும்பை கூட அண்டவிடமாட்டேன்’ என்கிறார். அன்னத்தின் அப்பாவிடம், ‘ அன்னம் வாழ்க்கை பிரச்னை தேவையில்லாம நீ முடிவெடுக்காத. அப்புறம் வேற மாதிரி முடிவாகிடும்’ என்கிறார்.

அன்னத்தின் அப்பா, ‘என்ன மிரட்டுறீயா’ என்கிறார். மாமாவிடம் அன்னம், ‘வாழ்க்கையில முதல் முறையா ஒரு முடிவை எடுத்துட்டு தான் உங்ககிட்ட சொல்ல வந்திருக்கேன்’ என்கிறார்.

சிங்கப் பெண்ணே

மகேஷ், ’நாளைக்கு எனக்கு பர்த்டே நீங்க எல்லாரும் கலந்துக்கணும்’ என தன்னுடைய கம்பெனி ஊழியர்களை அழைத்து விடுகிறார். ஆனந்தி, ‘மகேஷ் சார் மாதிரி ஒரு நல்லவரா நினைச்சு பயப்படுற காலம் வரும்னு நெனச்சு கூட பாக்கல’.

மகேஷ், ‘நாளைக்கு ஃபங்ஷன்ல எல்லாரும் முன்னாடியும் ஆனந்திக்கு நான் புரோபோஸ் பண்ண போறேன் அன்பு’. ஆனந்தி, ‘இந்த பிரச்சனையும் இல்லாம அன்புவை மனசார காதலிக்கணும்னு நான் ஆசைப்படுறேன்’. அன்பு, ‘ மகேஷ் சார் என் மீது வைத்திருக்க நம்பிக்கை மொத்தமாக உடைய போற நாள் வரப்போகுது’.

கயல்

கயல், ‘ நான் எதுக்கு பயந்தேனோ அது இப்போ நிஜமா மாறுது’. வேதவள்ளி தன் அண்ணனுக்கு கால் செய்து ஷாலினியை காணும் என்கிறார். கயல், ‘ என் அம்மாவோட பாசம், என்னோட நம்பிக்கை எல்லாத்தையும் உடைக்க துணிஞ்சிட்டான் அன்பு’. அன்பு ’இதுவரைக்கும் அவ வேதவள்ளியோட பொண்ணு. இனிமே அவ என்னோட பொண்டாட்டி’.

கயல், ‘அன்பு வாழ என்னோட மொத்த குடும்பமும் இப்ப தலை குனிய போகுது. அன்புவை நான் இப்போ எப்படி தடுத்து நிறுத்த போகிறேன்’.

மருமகள்

ஆதிரை, ‘அன்பு வாங்கின பணத்தை சுத்தி இங்க நிறைய சூழ்ச்சி நடந்துகிட்டு இருக்கு. நான் கொடுக்கிறேன் சொன்ன பணத்தை இன்னைக்குள்ள கொடுக்கணும். இல்லனா என் வாழ்க்கையில பெரிய சிக்கல் ஏற்படும்’.

பைனான்சியர், ‘சாயந்திரம் அஞ்சு மணிக்குள்ள என் பணத்தை எடுத்து வைக்கல. அப்புறம் அசிங்கமாயிடும்’ என்கிறார். ஆதிரை, ‘தேவா விரி்ச்ச வலையில சிக்கி நிக்கிற என் அப்பா’. தேவா, ‘ உங்க அப்பா கடை பகுதியை என் மேல எழுதி வச்சுட்டா 10 லட்சம் நான் தரேன்’. ஆதிரை, ‘இப்படி சுத்தி இருக்க பிரச்சினை இருந்து என் குடும்பத்தை நான் எப்படி காப்பாற்ற போறேன்’.

மூன்று முடிச்சு

ரிஜிஸ்டர் ஆஃபிசில் நந்தினி, ’இந்த குடும்பத்தோட சுயநலமும், தேவைகளும் எனக்கு எதிரா நிக்கிறது’. அந்த நேரத்தில் அங்கு வரும் சுந்தரவள்ளி பேப்பரை கிழித்து போடுகிறார்.

சுந்தரவள்ளி, ’அபிஷியலா பத்திரிக்கை அடிச்சு கல்யாணத்த ரிஜிஸ்டர் பண்றீங்களா’ என்கிறார். நந்தினி, ‘ செய்யாத தப்புக்கு குற்றவாளியா நிக்கிறேன்’. சுந்தரவள்ளி, ‘ நான் அந்த வீட்ல இருக்கணுமா? இல்ல அவ அந்த வீட்ல இருக்கணுமா? முடிவு பண்ணிட்டு அப்புறம் பண்ணுங்க’ என கூறிவிட்டு செல்கிறார்.

நந்தினி, ‘ கடைசில எல்லாரும் சேர்ந்து என்கிட்ட பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டீங்களே. இதற்கான முடிவை நான் இன்னைக்கு கொண்டு வரப் போறேன்’.

Next Story