நந்தினியின் தடுமாற்றம்… அன்னம் கல்யாணம்… ஆதிரைக்கு சிக்கல்… ஆனந்தியின் பயம்…

by Akhilan |
நந்தினியின் தடுமாற்றம்… அன்னம் கல்யாணம்… ஆதிரைக்கு சிக்கல்… ஆனந்தியின் பயம்…
X

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி டாப் 5 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் புரோமோ தொகுப்புகள்.

கயல்

கயல் மற்றும் மூர்த்தி வர, அன்பு ஷாலினியை இழுத்துக்கொண்டு காரில் இருக்கிறார். கயல் அன்பு என கட்டிக் கொண்டே பின்னால் ஃபாலோ செய்கிறார். வேதவல்லி ஷாலினியை அன்பு இழுத்துக் கொண்டு ஓடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கயல் மற்றும் மூர்த்தி கோயிலுக்கு வர, ‘மூர்த்தி அவங்க ரெண்டு பேரும் கோயிலுக்கு தான் போயிருக்காங்க’ என்கிறார் கயல். இந்த கல்யாணம் தேவியோட வாழ்க்கையை பாதிக்கும் என்கிறார் மூர்த்தி.

சிங்கப் பெண்ணே

மகேஷ் அன்புவிடம் நாளைக்கு பர்த்டே பார்ட்டி இல்ல ஆனந்தியிடம் என் காதலை ப்ரொபோஸ் செய்யப் போகிறேன் என்கிறார். மகேஷ் அம்மா நான் சொல்றேன் என் வீட்டு மருமக நீதான் என மித்ராவிடம் கூறுகிறார்.

ஆனந்தி அன்புவிடம், நான் உங்கள தான் காதலிக்கிறேன் என்று தெரிஞ்சா. மகேஷ் சார் விட்டுக் கொடுக்க வாய்ப்பு இருக்கு என்கிறார்.

மருமகள்

ஆதிரை, என்னை தூக்கிட்டு போக அந்த சிங்கம் புலி மட்டுமல்ல அவங்க தாத்தா வந்தாலும் முடியாது என்கிறார். வேல்விழி சித்தப்பாவிடம், ஆதிரை அந்த பிரபுவை பொறுத்தவரையும் இன்னைக்கு சாயந்தரம் அஞ்சு மணி ஓட அவங்க வாழ்க்கை இருண்டு போகப்போகுது என்கிறார்.

இதை கேட்கும் சித்தி கோபத்தில் போது நிறுத்துங்க என கத்துகிறார். ஆதிரைக்கு அவருடைய மாமனார் பணத்தை தயார் செஞ்சிட்டியாம்மா என கேட்கிறார்.

அன்னம்

குணா அன்னத்தின் மாமாவிடம், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். அன்னம் ஒத்துக்கலை. மாமா பேசினார் ஒத்துகிச்சு என்கிறார். இதை கேட்கும் மாமா கோபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வீட்டில் குணா அக்கா சொல்றது கரெக்ட். நாளைக்கு என்ன வேணாலும் நடக்கும். நிச்சயம் பண்றது தான் சரி என்கிறார். குணாவின் டாட்டூவை குறித்து அன்னம் சித்தி கேட்க அங்கு அன்னம் வந்துவிடுகிறார்.

மூன்று முடிச்சு

நந்தினி அருணாச்சலத்திடம், நடந்தத நான் கல்யாணமாவே நினைக்கல. இதனால் என் குடும்பமே பிரிஞ்சுருச்சு. சூர்யாவிடம் அருணாச்சலம், அம்மாவை எதுவும் பிரச்னை பண்ணாம பாத்துக்கணும். எல்லாம் உன் கையில் தான் இருக்கு என்கிறார்.

சூர்யா, சிறப்பா செஞ்சிடுவோம். நந்தினி அருணாச்சலத்திடம் அதெல்லாம் எதுவும் வேண்டாம் என்கிறார். அருணாச்சலம் இல்லம்மா கண்டிப்பா தாலி பிரித்துப் போடும் பங்க்ஷன் நடக்கும் என்கிறார்.

Next Story