அன்னம் நிச்சயம்… ஆனந்தி உடைத்த உண்மை.. நந்தினிக்கு சிக்கல்… கயலை குறை சொன்ன அன்பு…

by Akhilan |
sun serials
X

sun serials

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி டாப் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

கயல்

வீட்டில் பிரச்சனை வெடிக்க எழில் எல்லாரையும் அமைதிப்படுத்தி, தேவியோட வளைகாப்பு எந்த பிரச்சினை இல்லாமல் நடக்கணும். அவங்கள சமாதானம் செய்வது எப்படின்னு மொத எல்லாரும் யோசிங்க என்கிறார். கயல், ‘இனிமேல் ஆச்சும் எந்த முடிவா எடுக்கிறதா இருந்தாலும் யோசித்து எடுங்க.

மறுபடியும் சின்ன புள்ளைங்கன்னு காட்டிடாதீங்க என்கிறார். இதில் கோபமாகும் அன்பு, பெரியவங்க நீங்க ஒழுங்கா இருந்தா நாங்க ஏன் சின்ன பிள்ளைங்க மாதிரி நடக்கணும். இந்த பிரச்னை எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான். தேவி வாழாவெட்டியா இருக்கதுக்கும் காரணம் நீங்கதான் என்கிறார்.

சிங்கப்பெண்ணே

மகேஷ் ஆனந்தியிடம், நீ இவ்வளவு நாள் எப்படி இருந்தியோ எனக்கு தெரியாது. நான் உன்ன என் லைஃப் பார்ட்னரா தான் நினைச்சேன் என்கிறார். ஆனந்திக்கு அன்பு கால் செய்ய அதை வாங்கி மகேஷ் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாக அன்பு தன் நண்பர்களிடம் கூறுகிறார்.

ஆனந்தி மகேஷிடம், அன்புவை நான் மனசார காதலிக்கிறேன் சார். என்னை மன்னிச்சிடுங்க சார் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துவிடுகிறார்.

மூன்று முடிச்சு

அருணாச்சலத்திடம் சூர்யா, அதான் அவளே வரேனு சொல்றாள என்கிறார். நந்தினி செயினை போட்டுக்க போறதா இருந்தாலும், போட்டுவிட போறது நீதானே என்கிறார். அருணாச்சலம் நந்தினியை நகைக்கடைக்கு அழைக்கிறார்.

நந்தினி அதுக்கு எதுக்கு நான் எனக் கேட்க மாதவி வா நந்தினி அப்பாதான் இவ்வளவு சொல்றாருல என்கிறார். எல்லாரும் கிளம்பி செல்ல வாசலில் சுந்தரவள்ளி வந்து என்ன எல்லாரும் கூட்டமா வந்து நிக்கிறீங்க எனக் கேட்கிறார்.

அன்னம்

அன்னம் தன்னுடைய மாமாவுக்கு கால் செய்து எனக்கு பேருக்கு தான் அப்பானு இருக்கிறாரு. என் மனசால அப்பா, அம்மா எல்லாமே நீங்கதான் என்கிறார். மாமா, சரவணனிடம் அம்மா பேச்சை தான் கேட்பாரோ என்கிறார். யாரும் கேட்கிறது இல்ல. நான் கேட்கிறேன் என்கிறார். பங்ஷன் நடந்துக்கொண்டு இருக்கிறது. அன்னம் தங்கை என்னக்கா மாமா வருவாரா எனக் கேட்கிறார். கண்டிப்பா மாமா வரும் என்கிறார்.

Next Story