ஆனந்தியின் ஆசை.. கயலுக்கு சிக்கல்… அன்னம் அழுகை… பிரபுவின் கோபம்… நந்தினியின் உதவி…

by Akhilan |   ( Updated:2024-12-20 07:07:33  )
சன் சீரியல்
X

சன் சீரியல்

Sun Serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு, மருமகள், அன்னம், கயல், சிங்கப் பெண்ணே உள்ளிட்ட தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளுக்கான ப்ரோமோ தொகுப்புகள்.

கயல்

கயல் மருத்துவமனையில் அந்த டாக்டர் வந்திருக்க, போலீஸ்ல எல்லாம் சிக்கனையே ஊரை விட்டு ஓடி இருப்பேன்னு நினைச்சேன். வெக்கமே இல்லாம இன்னும் இங்க தான் சுத்திக்கிட்டு இருக்கியா என்கிறார். டாக்டர் மனதில், போடி போ நீ இந்த ஹாஸ்பிட்டலில் தானே இருக்க போற.

என்ன செய்றேன்னு பாரு என சபதம் எடுக்கிறார். கயல் சரவணவேலிவிடம், அனுவை ரொம்ப நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். எதிர்காலத்தில் உனக்கும் எனக்கும் குழந்தை பிறந்தால் இப்படித்தான் பார்த்துக்கொள்வேன் எனக் கூறுகிறார்.

மூன்று முடிச்சு

சுந்தரவள்ளி கையில் சில பெண் போட்டோக்கள் இருக்க யார் இது என கேட்கிறார். சூர்யாக்காக பெண் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் எனக் கூற இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. நந்தினி அருணாச்சலத்திடம் பாக்குற வேலைக்கு மட்டும் சம்பளம் கொடுத்தால் போதும்.

இனிமேல் ஒரு ரூபாய் கூட அதிகமாக கொடுக்க வேண்டாம் என கூறுகிறார். விஜய் பார்க்க அருணாச்சலம் வர நந்தினிக்கு தெரியாம எப்படி சார் என கேட்கிறார். ரிஜிஸ்டர் வரையும் கொண்டுட்டு போய்ட்டா அங்கே போய் இதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என கூறி விடுகிறார்.

அன்னம்

அன்னம் பைக்கில் வர அண்ணியும், மாமாவும் நகைக்கடையில் நிற்பதை பார்க்கிறார். அத்தை வந்து வீட்டில் தாய் மாமன் சொல்லி எங்க கிட்டே இருந்து எல்லாத்தையும் பிடுங்கி திங்கற என்கிறார். இனிமே என்னால உங்க குடும்பத்துல எந்த பிரச்சினையும் வராது போங்கத்த என அன்னம் கெஞ்சுகிறார்.

சிங்க பெண்ணே

ஆனந்திக்கு அன்பு பரிசு கொடுக்கிறார். கோட்டைச்சாமி வீட்டிற்கு வந்து சத்தம் போட அதுக்கு பதிலை சொல்லுங்க என கேட்கிறார். ஆனந்தியின் அக்கா ஆனந்தி சொல்லுவா என போனை கொடுக்க யோவ் கோட்டைச்சாமி என்கிறார்.

ஹாஸ்டல் வார்டன் ஆனந்தியை அழிக்கணும்னு கனவுல கூட நினைக்க வேண்டாம் என மித்ராவிடம் கூறிவிடுங்கள் என அவரின் தோழிகளிடம் சொல்கிறார். அவர் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு. அவர் மனசை நோகடிக்காம நம்மள பத்தி சீக்கிரம் சொல்லுங்க அன்பு என்கிறார் ஆனந்தி.

மருமகள்

வேல்விழி தன்னுடைய அத்தையிடம், ஆதிரையோட சித்தி மனோகர் கிட்ட இருக்க பத்திரத்தை கேட்டிருக்காங்க. இப்ப நீங்க என்ன பண்றிங்கன்னா என சில ஐடியாக்களை கூறுகிறார். பைனான்சியர் ஆபிஸில் வந்து பிரபுவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்னும் ரெண்டு நாள்ல பணம் வரணும் என அவர் கேட்க, இரண்டு நாள்ல நான் எங்க போவேன் என கத்துகிறார் பிரபு. இந்த நேரத்தில் ஆதிரை கால் செய்து உங்களுக்கு சமைச்சு இருக்கேன் சாப்பாடு எடுத்துக்கொண்டு வரவா என கேட்க பிரபு வேண்டாம் என்கிறார். ஆதிரை ஏன் என கேட்க, என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு தெரியுமா எனக் கத்துகிறார்.


Also Read: அஜித்தின் அடுத்த பட டைரக்டர் சிவா இல்லையாமே!. இது வேறவெவல் டிவிஸ்ட்!..

Next Story