சன் டிவி டிஆர்பி ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்ஸ்… மிஸ் பண்ணாதீங்க…
Sun TV: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ குறித்த சூப்பர் அப்டேட்கள் வெளியாகி இருக்கிறது.
சிங்கப் பெண்ணே
ஆனந்தி தன் கையில் போட்டிருந்த கட்டை அவிழ்த்து விட்டு துணியை தைக்க தொடங்குகிறார். மித்ரா இன்னும் பத்து பீஸ் தான் வித்தியாசம் ஆனந்தி ஜெயிச்சிட கூடாது கருணாகரன் என்கிறார். அந்த நேரத்தில் ஆனந்தி மயங்கி விழுகிறார்.
இதை பார்த்து அன்பு மற்றும் மகேஷ் பதறி வருகின்றனர். என்னாச்சு ஆனந்தி என அவரைப் பிடித்து உலுக்கி கொண்டிருக்கின்றனர். இதை பார்த்து மித்ரா மற்றும் கருணாகரன் இருவரும் சந்தோஷம் அடைகின்றனர்.
மூன்று முடிச்சு
சூர்யா அருணாச்சலத்திடம் ரிமோட் ஒன்றை கொடுத்து விடுகிறார். உங்க எல்லாருக்குமே மண்ட குழம்புமே. இவ என்ன செய்கிறான்னு யோசனையாய் இருக்குமே என ஒன்றை காட்டுகிறார். இதை பார்த்து சுந்தரவல்லி கோபம் கொள்கிறார்.
இதை பார்த்துட்டு நான் டெய்லியும் கடந்து போகணுமா எனக் கேட்க கண்டிப்பா அதுக்காக தானே இதை செஞ்சது என்கிறார் சூர்யா. நந்தினி, ஏற்கனவே என்கிட்ட இருந்து நிம்மதியை பறிச்சிட்டீங்க. சந்தோஷத்தை பறிச்சிட்டீங்க. இருக்கிறது உயிர் மட்டும் தான் அதையும் எடுத்துட்டீங்கன்னா நிம்மதியா போய் சேர்ந்திடுவேன் என்கிறார்.
மருமகள்
பிரபுவை அணைத்துக் கொண்டு நிற்கும் ஆதிரை. நேத்து ஆபீஸ்ல அவ்ளோ பிரச்சனை நடந்து இருக்கு ஏங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை என்கிறார். உனக்கு எப்படி தெரியும் என பிரபு கேட்க எங்க அப்பா தான் சொன்னார் என்கிறார்.
ஆபீஸ் வரும் சித்தப்பாவிடம் நீங்கள் நியாயமா வேலையை முடிச்சிருந்தா உங்க பேரு சேங்சன் ஆகும். இல்லன்னா என்ன ஆகும்னு நான் சொல்ல வேண்டியதில்லை எனக் கூற சித்தப்பா ஏய் என கத்துகிறார். ஆதிரை அப்பா தண்ணி கேன் எடுத்துக் கொண்டிருக்கும்போது தவறி விழ ஆதிரை அதை பார்த்துவிட்டு ஓடி வருகிறார்.
அன்னம்
மாமா அன்னமிற்கு கால் செய்து நடந்த விஷயத்தை போட்டு மனச குழப்பிக்காம. நிம்மதியா படு என்கிறார். நீங்க என்ன உட்கார வச்சு பாக்கணும்னு நினைச்சது ஒரு இடம். ஆனா என்ன பார்த்தது ஒரு இடம். இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலைங்க மாமா.
அன்னத்தை சிலர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து நிறுத்தி இருக்கின்றனர். அன்னம் நான் சத்தியமா நகையை எடுக்கலை என கூறுகிறார். அப்புறம் எப்படி நகை உடம்புக்குள்ள வந்துச்சு எனக் கேட்க சத்தியமா அதுதான் தெரியல சார் என்கிறார்.