கயலின் பொறுமை… ஆனந்தியின் கஷ்டம்… ஆதிரையின் வைராக்கியம்… நந்தினிக்கு சந்தோஷம்… அன்னம் காதல்
Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பியில் டாப் 5 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ தொகுப்புகள்.
கயல்
கயல் வீட்டிற்கு வரும் சுப்பிரமணி ’எங்க அப்பா கிட்ட இருந்து 3 லட்சம் பணம் வாங்க நீங்க தானே. அதை உடனே எடுத்து வைங்க எனக்கு வேணும்’ என சத்தம் போடுகிறார். இதில் கடுப்பாகும் எழில் ’ஒழுங்கா இங்கிருந்து போயிடு அதான் உனக்கு நல்லது’ என்கிறார்.
எழிலிடம் கயல், இதுக்காக கோவப்படுவதை விட இதுவும் கடந்து போகும்னு அமைதியா போயிட்டு இருக்கு நல்லது’ என்கிறார். எழில் ’என்னால அப்படி போக முடியவில்லை’ என்கிறார்.
சிங்கப்பெண்ணே
மகேஷ் ஆனந்தி தோழிக்கு கால் செய்து, ‘ ஆனந்தி வரவில்லை என்றால் அன்புக்கும் ஆனந்திக்கும் காதல் இருக்குன்னு உங்க அம்மா சந்தேகப்படுறது உண்மையாகிடும்’ என்கிறார்.
ஆனந்தி அம்மா கால் செய்து, ‘ இன்னும் எவ்வளவு நேரம் ஆனாலும் சரி நீ வந்து தான் ஆகணும். வரலை என்றால்’ எனக் கூறி சில விஷயங்களை கூறுகிறார். ஃபங்ஷனில் அன்பு ’வராத ஒருத்திக்காக எதுக்கு எல்லாரையும் கஷ்டப்படுத்திகிட்டு இருக்கீங்க’ என சத்தம் போடுகிறார். அந்த நேரத்தில் ஆனந்தி வர அன்பு அதிர்ச்சி அடைகிறார்.
மருமகள்
பிரபு ஆதிரையிடம் ’நீயும் உங்க அப்பாவும் சேர்ந்து என்னை ஏமாத்த பாக்குறீங்களா’ என சத்தம் போடுகிறார். இதில் ஆதிரை கோபத்தில் கிளம்ப பிரபு ’எங்க போற’ என கேட்கிறார். ’எங்கேயோ போறேன் ஆனா பணம் கிடைக்காமல் இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன்’ என கூறிவிடுகிறார்.
பிரபுவின் சித்தி ’நாளைக்கு ஈவினிங் தானே பணம் தரணும் நான் எப்படியாவது ஏற்பாடு செஞ்சு தரேன்’ எனக் கூறுகிறார். பிரபுவின் அப்பா சம்மதிக்க இதை வேல்விழி பார்த்து விடுகிறார்.
மூன்று முடிச்சு
சுந்தரவள்ளி அருணாச்சலத்திடம் ‘ நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அதை நீங்களே அட்டென்ட் பண்ணிடுங்க என்கிறார். இதில் அதிர்ச்சியாகும் அருணாச்சலம் ’நாளைக்கா’ என கேள்வி எழுப்புகிறார். சுந்தரவள்ளி குழப்பமாக ’ஆமாம் ஏன்’ எனக் கேட்கிறார்.
மாதவி அருணாச்சலத்திடம், ‘ பத்திரிக்கையை டேபிளிலேயே வைத்துவிட்டு வந்துட்டோம்ப்பா’ என்கிறார். இதனால் அதிர்ச்சியான அருணாச்சலம் உடனே காரை வீட்டிற்கு திருப்புகிறார். அதற்குள் சூர்யா பத்திரிக்கையை எடுத்து படிக்க நந்தினி அதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அன்னம்
கார்த்திக் ’இந்த ஆட்டத்துல நாம ஜெயிக்கிறது முக்கியம் இல்ல அண்ணன் ஜெயிக்கணும்’ என ரம்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். ’அவர் என்ன பிளான் தான் வச்சிருக்க சொல்லு’ எனக் கேட்கிறார். ’வெயிட் அண்ட் சீ’ என்கிறார் கார்த்திக்.
கார்த்திக்கிடம் சரவணன், ’நடிப்புக்கு கூட பாசம் இருக்க மாதிரி நடிக்க முடியாதுடா. அவ்வளவு வெறுப்பு இருக்குடா மனசுல’ என்கிறார். கார்த்திக் அன்னத்திடம், ‘ வீடியோவை யாருக்கும் அனுப்பக்கூடாது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்’ எனக் கூறுகிறார். அன்னம், ‘ வெளியில் தானே அனுப்பக்கூடாது. வீட்டுக்குள் அனுப்பலாம் தானே’ என யோசிக்கிறார்.
Also Read: இனி காதல் மட்டும்தான்!..'ரெட்ரோ' லுக்கில் மாஸ் காட்டும் சூர்யா.. டைட்டில் டீசர் எப்படி இருக்கு?..