Connect with us

television

கயல் முதல் மூன்று முடிச்சு வரை… சன் டிவி டாப் 5 சீரியலில் நடக்க போவது இதான்!..

சன் டிவி சீரியல்களின் இன்றைய தொகுப்பு

Sun TV: சன் டிவியில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் சீரியல்கள் குறித்த இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது.

கயல் தொடரில் கயல் மற்றும் எழில் இருவருக்கும் ஆன சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக இருக்கின்றனர். அப்பொழுது கயல் எழிலிடம் நான் ஒன்று சொன்னால் கோச்சிக்க மாட்டியே என்கிறார். என்னுடைய அப்பா எந்த தவறும் செய்யவில்லை அதை நான் நிரூபிக்க வேண்டும் என்கிறார்.

சுந்தரி சீரியலில் சுந்தரி மற்றும் பாட்டி இருக்க கார்த்திகிடம் என்ன நடந்தது என விசாரிக்கலாம் என்கிறார் வெற்றி. அவரிடம் சென்று கேட்கும் போது கண்ணு தெரியாமல் நடித்தேன். தற்போது உண்மையாகவே கண்ணு தெரியவில்லை என அழுகிறார்.

மருமகள் சீரியலில் வேள்விழியின் அப்பா அழைத்துக் கொண்டு வந்து ஆதிரையிடம் என்னுடைய பெண்ணிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறாய் என்கிறார். ஆதிரைடம் மன்னிப்பு கேட்க மாட்டாயா எனக் கேட்க நான் என்னைக்குமே கேட்க மாட்டேன் என்கிறார். பிரபு என் மீது உள்ள கோபம் போச்சு தானே எனக் கூற அதெல்லாம் இல்லை என ஆதரை சொல்லி விடுகிறார்.

சிங்க பெண்ணே தொடரில் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தியிடம் இப்பதான் வேலனை பார்த்தேன் என்கிறார். மித்ரா கையில் ஏதோ பேப்பர் வைத்திருக்க அவரிடம் கருணாகரன் இதை வைத்து என்ன செய்யப் போறீங்க மேடம் என்கிறார். அன்புவிற்கு கால் செய்து ஆனந்தி சிலவற்றை கூறுகிறார்.

மூன்று முடிச்சு தொடரில் புனிதா சிங்காரத்திடம் அவங்க வீட்டிலும் கல்யாணம் ஆகாம ஒரு பொண்ணு இருக்கு. அதுக்கு எவனாச்சும் ஒருத்தன் இப்படி தாலி கட்டிருந்த விட்டு வைப்பாங்களா என்று கேட்கிறார். நந்தினி குடும்பத்தினர் வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அங்கு வரும் சூர்யா என்னாச்சு என்று கேட்க எங்க வீட்ல இருக்கிறவங்க வந்து உங்க அம்மாவுக்கு புடிக்கல என்று நடந்த உண்மைகளை சொல்லிவிடுகிறார்.

Continue Reading

More in television

To Top