Connect with us

television

சிக்கலில் பாக்கியா… ரோகிணியின் பக்கா பிளான்… அப்பத்தா போட்ட நாடகம்!..

விஜய் டிவி இன்றைய சீரியல்களின் தொகுப்புகள்

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் சீதா மற்றும் அவருடைய அம்மா இவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா வர சீதாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை நேரில் பார்த்து முடிவு எடுத்துக் கொள்ள சொல்கின்றனர். இதை எடுத்து மனோஜ் மற்றும் ரோகினி குடும்பத்தாரை அழைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

முத்து எதற்காக தன்னை அழைத்து இருக்கிறாய் என கேட்கிறார். எல்லோரும் யோசித்து கடைசியில் மீனா அவர்களுடைய திருமண நாள் என கூறிவிடுகிறார். ஓ கேடிகள் ஒப்பந்தம் போட்டுக் கொண்ட நாளா எனக் கூறுகிறார். பெரிய ஸ்டார் ஓட்டலில் பிசினஸ் மீட்டிங் உடன் கொண்டாட இருப்பதாக மனோஜ் கூறுகிறார்.

பின்னர் முத்து மற்றும் ரவியை அழைத்து புது பிசினஸ் பார்னடருடன் அவர்கள் தொழிலை மாற்றி சொல்லி இருப்பதாக கூறி அவர்களுக்கு ஷாக் கொடுக்கிறார். கடைசியில் முத்து ஒப்புக்கொள்கிறார். பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா மற்றும் எழில் இருவரும் கம்பெனி ஓனரை பார்த்து அவரிடம் ஐந்து லட்சம் கடனாக கேட்கின்றனர்.

அவரும் அதற்கு ஒப்புக்கொள்கிறார். பாக்கியா தன்னிடம் உள்ள காசை வைத்து ஒவ்வொருவருக்கும் காசை டெபாசிட் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் ரெஸ்டாரண்டில் இருந்து கால்கள் வர ஜெனி இடம் அந்த பொறுப்பை கொடுத்துவிட்டு எழிலுடன் அந்த செல்கிறார்.

செழியன் வெளியில் இருக்க ஜெனி கால் செய்து ஆன்ட்டி ரொம்ப கஷ்டப்படுறாங்க. நம்ம உதவி செஞ்சே ஆகணும் என்கிறார். செழியன் அவர்கள் சின்னதா செஞ்ச வரை பிரச்சனை இல்லை. ஆனா இப்ப பாரு பெருசா செஞ்சு சிக்கல்ல மாட்டிக்கிறாங்க என்கிறார். செழியன் கோபிக்கு கால் செய்து பேசிக்கொண்டிருக்கிறார். அவரை தன்னுடைய ரெஸ்டாரண்டிற்கு வர கூறுகிறார் கோபி. ரெஸ்டாரண்டில் மக்கள் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் அப்பத்தாவின் விஷயம் தெரிந்து கோமதி மற்றும் ராஜி அழுதுக்கொண்டு இருக்கின்றனர். மருத்துவமனையில் இருக்கும் அப்பத்தாவை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் நலமுடன் இருப்பதாக கூறுகிறார்.

அப்பத்தா எனக்கு ஒன்னும் இல்லை. ஆனால் என்னை உடனே வெளியில் அனுப்பாதீங்க என்கிறார். வீட்டில் கோமதி அழுது கொண்டு இருக்கிறார். அப்பத்தாவை எல்லாரும் வந்து பார்க்க அவர் மனதில் கருவிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in television

To Top