Connect with us

television

ஈஸ்வரியால் கலங்கும் பாக்கியா.. தங்கமயில் மாட்டிக்கவே இல்லையே… சத்யாவிற்காக வந்த முத்து…

விஜய் டிவி இன்றைய தொகுப்பு

VijayTv: பாக்கியலட்சுமி தொடரில் இனியா டான்ஸ் போட்டியை காண குடும்பத்துடன் அனைவரும் செல்ல முடிவெடுக்கின்றனர். ஈஸ்வரியை கிளம்பி வர சொல்ல அவர் சாதாரண புடவையில் தயாராக இருக்கிறார். உடனே பாக்யா நல்ல புடவையை எடுத்துக் கொடுத்து அவரை தயாராக சொல்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு வரும் அமிர்தாவின் அம்மா சாவு நடந்த வீட்ல வெளில போகக்கூடாது. வெளியில இருக்கிறவங்க எல்லாம் என்ன பேசுவாங்க என அவர் பேசிக்கொண்டே செல்ல ஈஸ்வரி ரூமுக்குள் சென்று விடுகிறார். அங்கு வரும் பாக்கியா அமிர்தாவின் அம்மாவை திட்டி அனுப்பி விடுகிறார். ஈஸ்வரியை அழைக்க செல்ல அவர் வரமாட்டேன் என கூறிவிடுகிறார். போட்டி நடத்தும் இடத்திற்கு வர அங்கு இனியா டான்ஸ் ஆடுவதை பார்த்து குடும்பத்தினர் மகிழ்ச்சியடைகின்றனர்.

சிறகடிக்க ஆசை தொடரில் மீனா துணி மடித்துக் கொண்டிருக்க ஸ்ருதிக்கு பார்சல் ஒன்று வருகிறது. அதை அவர் வாங்க அங்கு வரும் விஜயா அந்த பார்சலை பிடுங்கிக் கொள்கிறார். பின்னர் அதை பிரித்து பார்க்க உள்ளே ஹெட்போன் ஒன்று இருக்கிறது. அதை காதில் மாட்டிக் கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது வரும் ஸ்ருதி பாட்டு கேக்குறீங்களா ஆன்ட்டி எனக்கு கேட்க உனக்கு வந்த பார்சல் தான் என்கிறார். இதனால் கடுப்பாகும் ஸ்ருதி விஜயாவை திட்டி விட்டு செல்கிறார். இதற்கு கடுப்பான விஜயா ரவியை பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கியா என திட்டி விடுகிறார்.

சத்யாவின் காலேஜிருக்கு வரும் முத்து மற்றும் மீனா முதல்வரை பார்க்க அனுமதி கேட்டு நிற்கின்றனர். ஆனால் அவர் பார்க்காமல் இருக்க பி ஏ வை அழைத்து சென்று அவரிடம் முதல்வர் குறித்த உண்மையை தெரிந்து கொள்கின்றனர். இதை வைத்து முத்து பிளான் ஒன்று போடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் முத்துவேல் குமாரை திட்டிக் கொண்டிருக்கிறார். பின்னர் பாண்டியன் வீட்டில் அனைவரும் தங்க மயிலின் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய செல்ல முடிவெடுக்கின்றனர். மீனா வருவதை மயில் வேண்டாம் என கூறிவிடுகிறார். அப்போது அங்கு வரும் கோமதி பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜி திருமணத்தில் தான் கூட இருந்ததை உளறிவிட அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர். ஆனால் தங்கமயில் பயத்தில் இருந்ததால் அதை கண்டுக்காமல் விட்டுவிடுகிறார்.

ரெஜிஸ்டர் அலுவலகத்தில் தங்கமயில் மற்றும் சரவணன் திருமணத்தினை முறையாக பதிவு செய்கின்றனர். யாரும் ஆதார் கார்டை பார்க்காததால் தங்கமயில் சற்று நிம்மதி அடைகிறார். இதனுடன் இன்றைய எபிசோட்கள் முடிந்தது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in television

To Top