Connect with us

television

நல்லா திட்டுங்க!. நான் கெக்க பெக்கனு சிரிப்பேன்!.. வடிவேல் மாதிரி ஆயிட்டாரே விஜே பிரியங்கா!..

தன்னை திட்டுபவர்கள் பற்றி பேசியிருக்கிறார் விஜே பிரியங்கா.

VJ Priyanka: விஜய் டிவியில் பல தொகுப்பாளினிகள் இருக்கிறார்கள். மொத்த நிகழ்ச்சிகளை பலரிடமும் பிரித்து கொடுப்பார்கள். இதில், விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பி யை பெற்ற சூப்பர் சிங்கர் ஜுனியர், சூப்பர் சிங்கர் பல சீசன்கள், ஸ்டார்ட் மியூசிக் சீசன்கள் ஆகியவற்றை நடத்தியவர் விஜே பிரியங்கா.

இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவரின் முழுப்பெயர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல வருடங்களாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். இவரை பிடித்தவர்களும் உண்டு. பிடிக்காதவர்களும் உண்டு. தொகுப்பாளினி என்பதால் லொட லொடவென பேசிக்கொண்டே இருப்பார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் போட்டியாளராகவும் கலந்து கொணடார். விஜய் டிவியில் பலமுறை சிறந்த தொகுப்பாளினி விருதை வாங்கியிருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பிரியங்கா கலந்து கொண்டார். அப்போது அவருக்கும், பல வருடங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் மணிமேகலைக்கும் இடையே முட்டிக்கொண்டது.

மணிமேகலையிடம் பிரியங்கா டாமினேட்டாக பேச அது பிரச்சனையாக மாறியது. மணிமேகலை ஏதோ சொல்ல பிரியங்காவிடம் அவரை மன்னிப்பு கேட்க் சொன்னது விஜய் டிவி. ஆனால், தன்மானமே முக்கியம் என சொல்லி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் மணிமேலை.

அப்போது சமூகவலைத்தளங்களில் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாகவே பேசினார்கள். பிரியங்கா எப்போதும் அப்படித்தான் யாரையும் வளர விட மாட்டார். எதையாவது செய்து கீழே தள்ளிவிடுவார். இதை அவர் பல வருடங்களாக செய்து வருகிறார் என பலரும் சொன்னார்கள். ஒருபக்கம் பாடகி சுசித்ரா ‘பிரியங்காவின் முதல் கணவன் என் தம்பி. அவனின் வாழ்க்கையை கெடுத்ததே அவள்தான்’ என பொங்கியிருந்தார்.

இந்நிலையில், என்னை வெறுப்பவர்கள் முன்பு கெக்க பெக்கனு சிரித்து என்னை சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைப்பதுதான் என் கேரக்டர்’ என சொல்லி இருக்கிறார் பிரியங்கா.

Continue Reading

More in television

To Top