Connect with us

Bigg Boss

2வதாக கட்டுன புருஷனை அதற்குள் இப்படி புலம்ப விட்டுட்டுப் போயிட்டாரே பிரியங்கா!.. கணவரின் வைரல் போஸ்ட்

பிரியங்கா தேஷ்பாண்டே, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திஸ் சிர்பி கேர்ள், அழகிய பெண்ணே, இசை அன்ப்ளக்ட் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது திறைத்துறையில் தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.இவர் ஜீ தமிழ், சன் டிவி, சுட்டி டிவி, சன் மியூசிக், மற்றும் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.

ஊ சொல்றியா ஊகும் சொல்றியா, கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி பெரும் புகழ் பெற்றார்.

அதை தொடர்ந்து ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், பிரியங்கா பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பின்னர்,குக் வித் கோமாளி சீசன் 5இல் போட்டியாளராகப் பங்கேற்று வெற்றி பெற்று 5 லட்சம் ரூபாய் பரிசை வென்றார்.

பிரியங்கா பிரவீன் என்பவரை திருமணம் செய்து சில ஆண்டுகளில் சில கருத்து வேறுபாடு காரணத்தினால் விவாகரத்தும் செய்துக்கொண்டனர். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி இலங்கையைச் சேர்ந்த DJ வசி சாச்சி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் லண்டனுக்கு ஹனிமூன் சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில், தற்போது பிரியங்காவின் கணவர், வசி சாச்சி பிரியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து மிஸஸ் தேஸ்பாண்டே எப்போ வரிங்க எனக் கேட்டு கியூட்டான பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்து கட்டுன புருஷனை விட்டுட்டு பிரியங்கா எங்கே போய்விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top