தாறுமாறாக இறங்கிய டிஆர்பி… மாஸ் காட்டும் சன் டிவி… பல்ப் வாங்கிய விஜய் டிவி!

by Akhilan |
Sun vs Vijay
X

TRP Rating: பிரபல சின்னத்திரை தொடர்களின் இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த பல மாதங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

சில வருடங்களாகவே டிஆர்பியில் சன் டிவியுடன் விஜய் டிவி தொடர்கள் மோதி வந்தது. ஆனால் அந்த இடத்தை கடந்த சில மாதங்களில் மொத்தமாக விஜய் டிவி இழந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். டாப் 5 இடங்களை தொடர்ச்சியாக சன் டிவி தன்னுடன் தக்க வைத்துக் கொள்கிறது.

அந்த வகையில் இந்த வார டிஆர்பி அப்டேட்டிலும் முதல் நான்கு இடங்களை சன் டிவி மட்டுமே பிடித்திருக்கிறது. காதலை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே தொடர் அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் அந்த சீரியலுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் இடம் பெற்று இருக்கிறது. ஹீரோ விக்ரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதால் சீரியல் மேலும் பல அதிரடிகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மூன்றாம் இடத்தில் கயல் இடம் பிடித்திருக்கிறது. நாயகியான கயல் தொடர்ச்சியாக பிரச்சனைகளை சந்தித்து வருவதால் இந்த சீரியல் தன்னுடைய முதல் இடத்தை தொடர்ச்சியாக இழந்து வருவது குறிப்பிடத்தக்கது. நான்காம் இடத்தில் மருமகள் சீரியல் இருக்கிறது.

இந்த சீரியலும் தற்போது ரசிகர்களை அதிருப்தி கொடுக்கும் கதைக்களமாக நகர்ந்து வருவதால் டாப் மூன்று இடங்களை இழந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து ஐந்தாம் இடத்தில் விஜய் டிவியின் முக்கிய சீரியல் ஆன சிறகடிக்க ஆசை இடம் பிடித்திருக்கிறது.

ஆனால் இந்த சீரியல் வரும் வாரங்களில் மேலும் பின்னுக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாம் இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தாவி தற்போது தான் டாப் 5க்குள் நுழைந்தது. தற்போது மனோஜிற்கு விபத்து நடந்து அதற்கான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இது மேலும் டிஆர்பியில் பெரிய அடி விழும்.

இதை அடுத்து ஆறாவது இடத்தில் சன் டிவியின் அன்னம் சீரியல் இடம் பிடித்திருக்கிறது. ஏழாவது இடத்தில் எதிர்நீச்சல் 2 இடம் பிடித்து இருக்கிறது. 8வது இடத்தில் கிளைமேக்ஸ் நெருங்கும் பாக்கியலட்சுமியும், 9வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் 10ம் இடத்தில் ராமாயணம் சீரியலும் இடம் பிடித்துள்ளது.

Next Story