முதல் சீசன் தான் மண்ணை கவ்வுச்சு… இரண்டாவது சீசன் டாப் குக்கு டூப் குக்கு பிளான் இதுதானாம்…

TopCookuDupeCooku: சன் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இதில் நடக்க இருக்கும் சுவாரஸ்ய தகவல்களும் கசிந்துள்ளது.
சமையல் நிகழ்ச்சியில் காமெடியை தொகுத்து ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் திடீரென விஜய் டிவியில் இருந்து வெளியேறியது. அவர்களுடன் நடுவரான செஃப் வெங்கடேஷ் பட்டும் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து இந்த டீம் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை வெளியிட்டனர். காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த சீசனை பார்க்க தொடங்கினர். ஆனால் குக் வித் கோமாளி போல இல்லாமல் செட் முதற்கொண்டு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

பிரபலமான கோமாளிகளை டூப் குக்காக இறக்கி இருந்தாலும் குக் வித் கோமாளி பெற்ற புகழை இவர்களால் பெற முடியவில்லை. வெங்கடேஷ் பட் கூட பல இடங்களில் கைவிட்டதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதன் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. குக் வித் கோமாளியின் ஆறாவது சீசன் தொடங்கி இரண்டு மாதம் முடிந்து விட்ட நிலையில் தற்போது டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி துவங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் சற்று முதல் பிரபலங்கள் வரை நிறைய மாற்றங்களையும் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் டூரிஸ்ட் பேமிலி பிரபலமான கமலேஷ் இதில் டூப் குக்காக களமிறங்க இருக்கிறார்.
கண்டிப்பாக இந்த இரண்டாவது சீசனில் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸ் மிகப்பெரிய மாற்றத்தை இந்த நிகழ்ச்சியில் கொண்டு வந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.