‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நான் சொன்னதுதான் பலிச்சது! வெங்கட் பட் சொல்றத கேளுங்க

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. விஜய் டிவியின் பல பிரபலங்கள் கோமாளிகளாக வந்து இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட 5 சீசன்களாக மக்களின் பேராதரவோடு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

எராளமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து ரசித்து வருகின்றனர். கடந்த நான்கு சீசன்கள் வரை இந்த நிகழ்ச்சியை வெங்கட் பட் மற்றும் செஃப் தாமோதரன் தொகுத்து வழங்கி வந்தார்கள். ஆனால் இந்த ஐந்தாவது சீசனை தாமோதருடன் இணைந்து மாதம்பட்டி ரெங்கராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சமீபகாலமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசனில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை குறித்து பல விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றன. இவர்கள் பிரச்சினை இருவேறு நாட்டு பிரச்சினை மாதிரி பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

ஒரு சில பேர் இதுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை என்று டீசண்டாக ஒதுங்குவதை பார்க்கமுடிகிறது. ஒரு சாதாரண பிரச்சினை இந்தளவு பூதாகரமாக கிளம்பியதற்கு காரணம் அந்த நிகழ்ச்சிதான். அந்தளவுக்கு மிகப்பிரபலமாகியிருக்கிறது குக் வித்கோமாளி நிகழ்ச்சி. எந்த நடிகர்களின் படங்களானாலும் புரமோஷனுக்காக சம்பந்தப்பட்ட நடிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து படத்தை பற்றி பேசுகின்றனர்.

இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் என்பவர் யார் என இந்த உலகத்திற்கே தெரிய ஆரம்பித்தது. முதல் இரண்டு சீசன்களில் புகழின் நகைச்சுவை அனைவரையும் ஈர்த்தது. இதை பற்றி வெங்கட் பட் கூறும் போது முதல் சீசனில் ஆரம்பித்து இரண்டாவது சீசனில் புகழ் ஷகீலாவுடன் ஜோடியானார்.

அப்போது ஒரு சமயம் புகழின் கழுத்தை பிடித்து ‘ நீ ஒரு நாள் நான் போன் செய்யும் போது என்னால் இப்ப பேசமுடியாது. மூன்று நாள்கள் என்னை பார்க்கவும் முடியாது. நான்காவது நாள் வருகிறேன் என்று சொல்லுமளவிற்கு பிஸியாக படங்களில் நடிக்க வேண்டும்’ என வெங்கட் பட் புகழிடம் கூறினாராம். அவர் சொன்னதை போல் மூன்றாவது சீசனில் படங்களில் நடிக்க ஆரம்பித்ததால் கலந்து கொள்ளாமலேயே போனது என வெங்கட் பட் கூறினார்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it