விஜயாவின் தண்டனை... பழனியின் முடிவு... ஈஸ்வரியிடமே ஆக்ட்டிங் போடும் கோபி
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
பாக்கியலட்சுமி
ராதிகாவை பார்க்க வரும் கோபி அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். எனக்கு அம்மாவும் முக்கியம். நீங்க ரெண்டு பேரும் முக்கியம் என ராதிகாவிடம் கூறுகிறார். ஒரு கட்டத்தில் முடிவெடுத்து நீங்க ரெண்டு பேரும் பாக்கியா வீட்டுக்கு என்னுடன் வாங்க என அழைக்கிறார்.
ஈஸ்வரி வாசலை பார்த்து காத்துக் கொண்டிருக்க அவரிடம் வாயடித்துக் கொண்டிருக்கிறார் பாக்கியா. அந்த நேரத்தில் அங்கு வரும் கோபி ராதிகா மற்றும் மயுவுடன் வர ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.
ராதிகாவிடம் நெஞ்சு வலிப்பது போல இருப்பதாக கூறி அவரை சமாதானம் செய்து அழைத்து வந்திருக்கிறார். ஈஸ்வரி இவளால உனக்கு மறுபடியும் உடம்பு சரியில்லாமல் போகும் என கூற மீண்டும் அதே போல் பேசி ஈஸ்வரியையும் சம்மாதிக்க வைத்து விடுகிறார்.
சிறகடிக்க ஆசை
காலையில் மனோஜ் வந்து கதவை தட்ட ரோகிணி திறக்காமல் இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் விஜயா வேகமாக கதவைத் தட்டி ரோகிணியை கதவை திறந்து வர அதற்கு திட்டுகிறார். கதவை மூடாமல் தயாராகி வரும்படி சொல்லி அனுப்புகிறார்.
மீனா சிட்டியிடம் ரோகிணி கடன் வாங்கிய விஷயங்களை முத்துவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். ரோகிணி தயாராகி வர எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரோகிணி சாப்பிட அமர விஜயா அவரை எழுந்து செல்ல சொல்லி விடுகிறார். முத்து மற்றும் மீனா ஆதரவாக பேசியும் விஜயா கேட்காமல் இருக்கிறார்.
பின்னர், ரோகிணி பார்வதியை பார்த்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி அழுது கொண்டிருக்கிறார். பார்வதி நான் விஜயாவிடம் பேசுவதாக அவருக்கு நம்பிக்கை தருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
பழனிக்கு பெண் பார்த்து இருக்கும் விஷயத்தை செந்திலிடம் கூறுவது போல பாண்டியன் சக்திவேல் மற்றும் வெற்றிவேல் காதில் விழும்படி சொல்லுகிறார். இதைக் கேட்டவர்கள் கோபமாகி பழனியை வர சொல்லி நீ அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாது என மிரட்டி கொண்டிருக்கின்றனர்.
அக்காவும் மாமாவும் தான் எனக்கு சின்ன வயசுல இருந்து நல்லத செஞ்சுகிட்டு இருக்காங்க. இப்ப என்னால அவங்களை விட்டு வர முடியாது என பழனி திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.
பாண்டியன் சொத்தை பிரித்தால் உனக்கு கொடுக்க மாட்டான் என சக்திவேல் கூற அவர் எதுக்கு கொடுக்கணும் என்கிறார் பழனி.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் பழனி கோமதியிடம் அண்ணன்கள் பேசிய விஷயங்களை கூறி இந்த குடும்பம் சேரும் நினைச்சேன். ஆனா பிரச்சினை தான் அதிகமாயிட்டு இருக்கு என சொல்லி வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து தங்கமயில் ஸ்கூலில் பாடம் நடத்திக் கொண்டிருக்க கரஸ்பாண்டன்ட் வருவதைப் பார்த்து பதறி விடுகிறார். பின்னர் அவரைக் காண ராஜி மற்றும் மீனா வர பெண் பார்க்க போக உங்களுக்கு எதுவும் தேவையா என கேட்க வந்ததாக கூறி செல்கின்றனர்.