ரோகிணியை மன்னித்த விஜயா… பாண்டியன் செஞ்ச கூத்து… பொறாமையில் இனியா!..

by Akhilan |
விஜய் சீரியல்
X

விஜய் சீரியல்

Vijay Serials: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

பாக்கியலட்சுமி

பாக்கியா மற்றும் மயூ இருவரும் ரூமில் படுத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அவருக்கு ஆறுதலாக பாக்கியா பேசிக் கொண்டிருக்கும்போது இனியா உள்ளே வருகிறார். என்னாச்சு என பாக்கியா கேட்க ஏசி வேலை செய்யல. அதான் இந்த ரூமுக்கு வந்தேன் என கூறுகிறார்.

மயூ மற்றும் இனியா நடுவில் பாக்கியா படுத்துக்கொள்கிறார். மயூ பாக்கியாவின் கையைப் பிடிக்க தானும் பொறாமையில் அதுபோலவே செய்து இனியா தூங்கி போகின்றார். காலையில் ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் பேசிக்கொண்டே கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதைப் பார்த்து ஈஸ்வரி கோபத்தில் இருக்க கோபி சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து ராதிகா மற்றும் பாக்கியா இருவரும் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அங்கு வரும் கோபி பத்து நாள் தங்குவதற்கான காசை கொடுக்கிறார்.

அப்போ பத்து நாளில் நீங்க கிளம்பிடுவீங்கன்னு நான் நம்பலாமா எனக் கேட்க ராதிகாவும் ஆமாம் என்கிறார். கோபி நாள் அதிகரிச்சா அப்ப காசு கொடுத்துக்கலாம் தானே எனக் கேட்கிறார். பாக்கியா தன் குடும்பத்திற்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க ராதிகா கோபி மற்றும் மயூவிற்கு உப்மாவை வைக்கிறார்.

சிறகடிக்க ஆசை

அண்ணாமலை மற்றும் விஜயா இருவரும் மனோஜ் மற்றும் ரோகிணி பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். விஜயாவை சமாதனம் செய்யும் அண்ணாமலை ரோகிணிடம் பேச கூறுகிறார். மனோஜை விட்டு ரோகிணியை கூப்பிட சொல்ல போன் செய்தாலும் எடுக்காமல் போகிறார்.

வித்யா வீட்டில் இருக்கும் ரோகிணி அழுது கொண்டிருக்கிறார். மனோஜ் வித்யாவிற்கு கால் செய்து அம்மா அழைப்பதாக கூறி வீட்டிற்கு வரக் சொல்கிறார். இதைத்தொடர்ந்து ரோகிணி வீட்டிற்கு வர விஜயா அவரை திட்டி விட்டு சமாதானம் அடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

பாண்டியன் வீட்டினர் பழனிக்கு பெண் பார்த்துவிட்டு நிச்சயத்திற்கு நாள் குறித்து விட்டு வீட்டிற்கு வருகின்றனர். இதில் சந்தோஷமடைந்த பாண்டியன் பழனியின் அண்ணன்களுக்கு காதில் விழுமாறு சத்தமாக வாசலில் நின்று கூறுகிறார். இதில் சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் கோபமடைகின்றனர்.

ராஜி மற்றும் மீனா இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, காலையில் கதிருடன் ரன்னிங் சென்ற விஷயம் குறிப்பு அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் ராஜி. இதைத் தொடர்ந்து இருவருக்கும் காதல் இருப்பதாக மீனா அவரை கலாய்த்து கொண்டிருக்கிறார். அடுத்த நாள் ராஜி மற்றும் கதிர் இருவரும் பயிற்சி செய்து கொண்டிருக்க அங்கு வரும் அவர் அம்மா மற்றும் சித்தி இருவரையும் பார்த்து சொல்கின்றனர்.

Next Story