முத்துவை காணவில்லை… சிக்கலில் தப்பித்த தங்கமயில்… கோபியின் திடீர் பாசம்!..
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சிறகடிக்க ஆசை எபிசோட்களின் இன்றைய தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை
மீனா காலையில் எழுந்து பார்க்க முத்து இல்லாமல் இருக்கிறார். தொடர்ந்து ஸ்ருதி வந்து காபி கேட்க அவரிடமும் சொல்லி புலம்பிக் கொண்டு இருக்கிறார். மீனா முத்துவை எல்லா இடத்திலும் தேடிக்கொண்டு உள்ளார். விஜயா பார்வதியை சந்தித்து பேசிக்கொண்டுள்ளார்.
சத்யாவை அழைத்துக்கொண்டு தேட செல்கிறார் மீனா. அண்ணாமலையிடம் மீனா பேசிக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்து செருப்பு தைக்கும் பாட்டி மற்றும் தாத்தாவை பார்த்து அவர்களிடம் முத்து பற்றி விசாரிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2
கோமதி மீனாவின் அம்மா தன்னை பாராட்டியதை பெருமையாக எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதை கேட்கும் குழலி வீட்டில் இருக்க தம்பி மனைவிகளை கலாய்த்துக்கொண்டு இருக்கிறார். பின்னர் எல்லாரிடமும் சொல்லிவிட்டு குழலி தன்னுடைய வீட்டுக்கு கிளம்பிவிடுகிறார்.
கதிர் மற்றும் ராஜி செல்லமாக சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர். செந்திலை அழைத்துக்கொண்டு கோமதி மீனாவின் ஆபிஸுக்கே சென்று அவர் அம்மாவை நேரில் சந்திக்கிறார். பின்னர் வீட்டில் இருந்து எடுத்துவந்த பலகாரங்களை கொடுக்கிறார். செந்தில் மீனாவின் அம்மாவை அழைத்துக்கொண்டு செல்கிறார். வீட்டில் வரும் செந்தில் கதிர் மற்றும் ராஜியின் சண்டையை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியாவின் புது ஆர்டருக்கு கோபி ஐடியா சொல்லுகிறார். இதை கேட்டு ஈஸ்வரி பெருமைபடுகிறார். ராதிகா கோபிக்கு கால் செய்ய உங்களை மிஸ் செய்வதாக கூற தன் குடும்பம் தன்னை மிஸ் செய்தது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். இதைக் கேட்கும் ராதிகா கோபப்படுகிறார்.
இருந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் போனை வைத்துவிடுகிறார். நடு இரவில் கோபிக்கு முழிப்பு தட்ட சமையல்கட்டில் சத்தம் வருவதாக ஈஸ்வரியிடம் சொல்கிறார். பாக்கியாதான் வேலை பார்த்துக்கிட்டு இருப்பா என்கிறார். பின்னர் எழுந்து சென்று பாக்கியாவிடம் தான் இதுவரை செய்த தப்புக்காக மன்னிப்பு கேட்கிறார்.
தொடர்ந்து தன்னுடைய தவறான விஷயங்களுக்காக வருந்துகிறார். பாக்கியா எதுவும் சொல்லாமல் சென்றுவிடுகிறார். ரூமில் ஈஸ்வரி பாக்கியா இருந்ததால் தான் இவ்வளவு பொறுமையாக இருந்ததாக கூறிக்கொண்டு இருக்கிறார். அடுத்த நாள் ஜாக்கிங்கில் பாக்கியாவிடம் அவரை குறித்து பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார்.