ரோகிணிக்கு உருவாகும் பெரிய ஆப்பு… கோபிக்கு சூடு போட்ட பாக்கியா… பாண்டியன் வீட்டில் சந்தோஷம்!...
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை
மனோஜ் காலையில் பூஜை செய்து தான் வீடு வாங்க இருக்கும் விஷயத்தை சொல்கிறார். 5 கோடி வீட்டை 3 கோடிக்கு கிடைப்பதாக கூறுகிறார். இதை கேட்கும் ரவி எப்படி இவ்வளோ குறைப்பாங்க எனக் கேட்க முத்து பேய் வீடா இருக்கும் என பயமுறுத்துகிறார். விஜயா கோபமாகிறார்.
பின்னர் இரண்டு நாட்கள் அங்கு சென்று தங்க வேண்டும் என மனோஜ் சொல்ல ரவி, ஸ்ருதி வரவில்லை என்கின்றனர். ஆனால் முத்து அவங்களை அழைத்து கொண்டு போய் மனோஜ் வீடு வாங்குறதுல நமக்கு பொறாமை என்பாங்க. அதுமில்லாமல் 3 கோடினு சொல்றான் ஏமாற போறான் எனச் சொல்லி வரச்சொல்கிறார்.
மனோஜ் மற்றும் ரோகிணி அட்வான்ஸ் கொடுக்க கோயில் வருகின்றனர். அந்த நேரத்தில் தண்ணிக்குடம் தட்டிவிடுகிறார். இதனால் அபசகுணம் என மீனா தடுக்க அவர்கள் வேறு ஒருவருக்கு வீட்டை மாற்றி விடலாம் எனப் பேசுகின்றனர். இதனால் ரோகிணி வீம்புக்கு காசை கொடுத்து அட்வான்ஸை கொடுத்து விடுகின்றனர்.
பாக்கியலட்சுமி
கோபியை பார்க்க ராதிகா வந்திருக்கிறார். அவர் குறித்து பேசாமல் தொடர்ந்து தன்னுடைய குடும்பத்தை பற்றியே கோபி பேசுகிறார். நீங்க நம்ம வீட்டுக்கு வரலாம் தானே எனக் கேட்க அங்க வந்தா நான் தனியா இருக்கணும். இங்க அம்மா, இனியா மற்றும் செழியன் இருப்பதாக சொல்லிவிடுகிறார்.
பாக்கியாவும் ரொம்ப நல்லவளா இருக்கா எனச் சொல்ல ராதிகா தான் கிளம்புவதாக சொல்லி சென்றுவிடுகிறார். ஈஸ்வரி நீ ஏன் இங்க வர? அவன் இங்கதான் நிம்மதியா இருக்கான். இன்னும் ராதிகா வீட்டுக்கு அனுப்பாதனு மட்டும் தான் சொல்லலை என்கிறார். தொடர்ந்து செழியனுக்கு வேலை போன விஷயத்தை சொல்லி புதுவேலை கிடைத்துவிட்ட விஷயத்தை ஈஸ்வரியிடம் கோபி சொல்கிறார்.
கோபியை தனியாக அழைத்து பாக்கியா காபி போட்டு கொடுக்கிறார். அவரினை ஓவர் பெருமையாக கோபி பேச எப்போ வீட்டுக்கு கிளம்புறீங்க எனக் கேட்க கோபி அதிர்ச்சியாகிறார். தொடர்ந்து பாக்கியா பேசிக்கொண்டு இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2
அப்பத்தா வீட்டுக்கு வந்திருக்கும் விஷயத்தை மீனா செந்திலுக்கு கால் செய்து சொல்கிறார். உடனே வீட்டுக்கு வரக் கூற செந்திலும் பாண்டியனிடம் சொல்கிறார். அப்பத்தா குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு இருக்க வெளியில் ராஜி அம்மா பயத்தில் இருக்கிறார்.
அப்பத்தா வெளியில் வரும் நேரம் பாண்டியன் வரும்போது சக்திவேல் மற்றும் வெற்றிவேலும் வந்துவிடுகின்றனர். அப்பத்தா கோமதி வீட்டுக்கு சென்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அப்பத்தா சொல்லியும் கேட்காமல் அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்கிறார் சக்திவேல்.