பெரிய பிரச்னையில் சிக்கும் மனோஜ் - ரோகிணி... கோபிக்கு ஓவராக செய்யும் ஈஸ்வரி... மீனாவின் சந்தோஷம்!..
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்பு.
சிறகடிக்க ஆசை
ரோகிணி மற்றும் மனோஜ் பீச் ஹவுஸை சுற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரோகிணி தான் சொர்க்கத்தில் இருப்பது போல இருப்பதாக கூறுகிறார். பின்னர் வீட்டு ஓனர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் ஐந்து கோடி வீட்டை மூன்று கோடிக்கு தருவதாகவும் பேசி விடுகின்றனர்.
அட்வான்ஸ் ஆக 50 லட்சம் கேட்க மனோஜ் தன்னால் முப்பது லட்சம் தான் முடியும் என கூறிவிடுகிறார். அதற்கு முன் ஐந்து லட்சம் அட்வான்ஸ் ஆக கோவிலில் வாங்கிக் கொள்ளலாம் என பேசி விடுகின்றனர். அவர்கள் திரும்பியதும் வீட்டு ஓனர்கள் 30 லட்சம் வாங்கிக் கொண்டு உண்மையான ஓனரிடம் ஒன்றரை லட்சத்தை கொடுத்துவிட்டு பெங்களூர் சென்றுவிடலாம் என பேசிக்கொள்கின்றனர்.
மீனாவிற்கு கிடைத்த டெக்ரேஷன் ஆர்டரின் காசை வாங்க வருகிறார். அப்பொழுது பழைய டெக்ரேஷன் பெண் வந்து மீனாவின் பெயரை கவனிக்கிறார். வீட்டில் முத்துவிடம் நான் தான் நிறைய காசு போடுகிறேன் எனக் கூற முத்து கவலைப்படுகிறார்.
பாக்கியலட்சுமி
உன்னை கோபி சாருடன் உன் மாமியார் சேர்த்து வைக்க பார்ப்பதாக கூற வாயை கழுவு என கடுப்பாகிறார் பாக்கியா. தொடர்ந்து வீட்டில் கோபி கால் செய்ய ராதிகா காத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் செய்ய மாட்டார் என்பதை அவர் அம்மா கூறுகிறார்.
தொடர்ந்து கோபி ராதிகாவை பார்த்துவிட்டு வருவதாக கூற ஈஸ்வரி பேசி சமாளித்து விடுகிறார். இனியாவிற்கு தேவையான விஷயங்களை கோபி சொல்லிக்கொண்டு இருக்கிறார். பின்னர் பாக்கியாவிற்கு வந்த புது ஆர்டரில் என்ன செய்யலாம் என குழப்பத்தில் இருக்க கோபி புது செஃபை போட்டுக்கொள்ள ஐடியா கொடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2
கதிருக்காக குழலி சமைத்து வந்து தர அதை எல்லாரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். தங்கமயில் அம்மா சமைத்து எடுத்து வந்ததை சரவணன் சாப்பிடாமல் இருக்க மயில் வருத்தப்படுகிறார். அதே நேரத்தில் செந்தில் சாப்பிடுகிறார். பின்னர் மீனாவை அழைத்து வந்து ஆபிஸில் விடுகிறார்.
கதிர் காலேஜ் கிளம்ப அவரை தடுத்துவிடுகிறார் ராஜி. பழனி கடத்தப்பட்ட பெண்தான் கதிர் காதலியோ என கலாய்க்க ராஜி திட்டிவிட்டு செல்கிறார். மீனாவை பார்க்க அவர் அம்மா இருவரும் பேசி சிரித்துக்கொண்டு கோமதி கொடுத்ததை சாப்பிடுகின்றனர். இதை கோமதிக்கு வீடியோ கால் செய்து சொல்கிறார் மீனா.