அசிங்கப்பட்ட மனோஜ்... வாய் அடங்காத ஈஸ்வரி.. . சந்தோஷத்தில் பாண்டியன் குடும்பம்

by Akhilan |
சிறகடிக்க ஆசை - பாக்கியலட்சுமி
X

சிறகடிக்க ஆசை - பாக்கியலட்சுமி 

Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை

மனோஜ் கடையில் இருக்க முத்து அண்ணாமலையை அழைத்து வருகிறார். எதற்காக வந்திருக்கிறீங்க என மனோஜ் கேட்க அதான் பேசிட்டோம்ல. நீ சீட்டில் இருந்து எழுந்திரி இனிமே அப்பாதான் ஓனர் என்கிறார். இதைத்தொடர்ந்து மனோஜை எழுப்பி விட்டு அண்ணாமலையை உட்கார வைத்து மாலை போடுகிறார் முத்து.

அதில் கோபமாக மனோஜ் போக அந்த நேரத்தில் சந்தோசி சார் வந்து விட சமாளிக்க பார்க்கிறார். ஆனால் டீலர்கள் வந்து சத்தம் போட முத்து வீடு வாங்க ஏமாந்த விஷயத்தை கூறிடுகிறார். நாங்கள் எல்லாம் பிசினஸ் தொடங்கி 10 வருஷம் கழிச்சு தான் அப்பார்ட்மெண்ட்டே வாங்கணும். உனக்கு அதுக்குள்ள ஏன் இந்த வேலை.

இதுவே இன்னொருத்தர் யாராவது இருந்தா டீலை கேன்சல் பண்ணி இருப்பேன். முத்து மற்றும் உங்க அப்பா முகத்துக்கு தான் உன்னை விட்டு போகிறேன் என மிரட்டி விட்டு செல்கிறார். வீட்டிற்கு வந்து எல்லோரும் சோகமாக இருக்க முத்துவை விஜயா திட்டிக் கொண்டிருக்கிறார்.

மனோஜும் முத்து மேல் பழி போட சந்தோஷ் சார் டீலர் கேன்சல் பண்ணாமல் போனதற்கு காரணமே முத்து மற்றும் அங்கிள் தான். அன்னைக்கு கூட நீங்க பொய் சொன்னத தெரிஞ்சும் அவர் இதை கொடுத்ததற்கும் முத்து தான் காரணம் என மறந்துட்டீங்களா எனச் ஸ்ருதி கூறுகிறார். இதை தொடர்ந்து மீனா மற்றும் முத்து இருவரும் மனோஜ் ஏமாற்றியவர் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி

ராதிகாவை ஈஸ்வரி வம்பு இழுக்க அந்த நேரத்தில் அங்கு வரும் கோபியிடம் இதை சாப்பாடு நல்லாவா இருக்கு என கேட்கிறார். அம்மாவுக்கா, இல்லை மனைவிக்கா என யாருக்கு சப்போர்ட் செய்வது என தெரியாமல் கோபி முழு பிதுங்கி நிற்கிறார். இருவரும் அவரை மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ராதிகா ஈஸ்வரியை தனியாக அழைத்துச் சென்று இனிமேல் இந்த விஷயத்துல தலையிடாதீங்க என மிரட்டி செல்கிறார். அந்த நேரத்தில் கோபி வர என்ன பேசினீங்க என கேட்க, உங்களோட ஹாஸ்பிடல் ஃபைல் குறித்து கேட்டுக் கொண்டிருந்ததாக மாற்றி பேசுகிறார்.

பின்னர் கோபி மற்றும் ராதிகா இருவரும் ரூமில் இருக்க இனிமே உங்க அம்மா நம்ம விஷயத்தை தலையிடக்கூடாது என கூறுகிறார். அதைக் கேட்டு கோபியும் பதட்டப்பட அவருக்கு மசாஜ் செய்து விடுகிறார் ராதிகா. நீயும் மயூவும் சந்தோஷமா இருக்கணும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

ரூமில் இருந்து வெளியே வரும் ஈஸ்வரி பாக்கியாவிடம் சென்று தன்னை ராதிகா மிரட்டிய விஷயம் குறித்து கூறுகிறார். இருந்தும் பாக்கியா அவருக்கு காது கொடுக்காமல் பேச்சை மாற்றிவிட்டு கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

பழனி தன்னுடன் அண்ணன் குடும்பமும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். பாண்டியன் நீ போய் உங்க அம்மாகிட்ட பேசி அவங்கள கூட்டிட்டு வா என அனுப்பி விடுகிறார். பழனி வந்து தன் அம்மாவிடமும் விஷயத்தை கூறுகிறார்.

அடுத்த நாள் பங்ஷனுக்கு பழனியை மாப்பிள்ளைகள் சேர்த்து தயார் செய்து கொண்டிருக்கின்றனர். மருமகள்கள் கோமதியுடன் இணைந்து ஃபங்ஷனுக்கு தேவையானவைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். எல்லோரும் சிரித்து சந்தோஷமாக இருக்கின்றனர்.

முத்துவேல் வீட்டில் அப்பத்தா தன் மருமகள்களுடன் பங்ஷனுக்கு கிளம்ப சரியாக முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் வந்து விடுகின்றனர். சக்திவேல் அவர்களைப் போகக்கூடாது என சத்தம் கூட முத்துவேல் போகட்டும் என அனுப்பி விடுகிறார். பின்னர் தன் தம்பியிடம் நேரில் போய் அங்கு நடப்பதை பார்த்து தெரிந்து கொண்டு வரட்டும் என சூசகமாக சொல்கிறார்.

Next Story