மனோஜின் ஆட்டம் ஓவர்... தப்பிச்ச தங்கமயில்... ஈஸ்வரியின் புது திட்டம்
Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.
சிறகடிக்க ஆசை
வீட்டின் உரிமையாளர் வந்து என்னுடைய வீட்டில் நீங்க எப்படி இருக்கலாம் என்கிறார். மனோஜ் நாங்க கதிர் என்பவரிடம் 30 லட்சம் கொடுத்ததாக கூற அவர் இந்த வீட்டில் குடி இருந்தவன். இரண்டு மாசமா வாடகை பாக்கி என்கிறார். இதில் ரோகிணி அதிர்ச்சி அடைந்து மயங்கி விடுகிறார்.
போலீசார் வந்து இவர் வீடு நீங்க உரிமை கொண்டாட முடியாது. உங்களை ஏமாத்தினவன் பேரில் ஒரு புகார் கொடுங்கள் எனச் சொல்லி அனுப்புகிறார். வீட்டின் பேர் பலகை வருகிறது. வீட்டிற்கு வரும் மனோஜை அண்ணாமலை திட்டிக்கொண்டு இருக்கிறார்.
முத்து நான் அப்பவே சொன்னேன். விசாரிக்கிறேனு இவன்தான் கேட்கலை என்கிறார். ஒன்னு இவன் ஏமாறுவான். இல்லை இவனை ஏமாத்துவாங்க எனச் சத்தம் போடுகிறார். ரோகிணியை அவங்க அப்பாவிடம் கேட்க சொல்கிறார் முத்து. இன்னும் கேஸ் தான் நடக்குது என ரோகிணி சமாளிக்கிறார்.
அண்ணாமலை முத்துவை தனியாக அழைத்து ஏமாத்திட்டு போனவை தேடி அலைந்து கொடுத்த அட்வான்ஸை வாங்க வேண்டும் என்கிறார். மனோஜின் பார்க் நண்பரை அழைத்து கொண்டு முத்து செல்கிறார். நான் அப்பவே சொன்னேன் உங்க அண்ணனிடம் விசாரிக்கலாம் என அவன்தான் கேட்கலை என்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
மயிலின் அப்பாவை கட்டி வைத்து இருப்பதை பார்த்து கதிர் சண்டைக்கு செல்கிறார். மயிலும் ஓடி வந்து பார்த்து குடும்பத்தை அழைத்துவருகிறார். எல்லாரும் சண்டைக்கு நிற்கின்றனர். மயில் அப்பா இருட்டில் தெரியாமல் வந்ததாக சொல்லி சமாளிக்கிறார்.
இதெல்லாம் நம்புற மாதிரி இல்லை. போலீஸுக்கு கால் செய்து இருக்கோம். அவர்கள் வந்து விசாரிக்கட்டும் என்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் மயிலின் அம்மா, என் பொண்ணு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல வந்து இருக்கிறார். எப்பையுமே அவளுக்கு நடு ராத்திரியில் வாழ்த்து சொல்வது அவர் வழக்கம் என்கிறார். போலீஸ் சென்றுவிட முத்துவேலும், சக்திவேலிடம் விடலாம் என்கிறார்.
பாக்கியலட்சுமி
வீட்டில் இனியா டான்ஸ் நிகழ்ச்சி குறித்து எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் குல தெய்வ கோயிலுக்கு செல்லலாம் என ஈஸ்வரி கேட்க கோபியும் ஒப்புக்கொள்கிறார். மயூ கோபிக்காக காத்திருக்க அங்கு வரும் ராதிகா அவரை அழைத்து செல்கிறார். உனக்கு நாங்களாம் இருக்கோம். புது வீட்டுக்கு போய் பெரிய பங்ஷனா இதை கொண்டாடலாம் என அவரை சமாதானம் செய்கிறார்.
காலையில் ஈஸ்வரி எல்லாரிடமும் சொல்ல பாக்கியா தன்னால் வர முடியாது எனக் கூறிவிடுகிறார். ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியா கெஞ்சி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. கோபி கேட்க எழுந்து சென்று விடுகிறார். ஜெனி தானும் வரவில்லை என காரணம் சொல்லி சமாளித்து விடுகிறார்.
எல்லாரும் கிளம்பி இருக்க ஜெனி, செழியனிடம் உங்க அப்பானா உசத்தி தான். அவர் சொன்னதும் கிளம்பிட்ட பாத்தியா என்கிறார். பின்னர் எல்லாரும் ரெடியாக இருக்க அவர்களை பாக்கியா மற்றும் ஜெனி வழி அனுப்புகின்றனர்.
Also Read: சூர்யாவுக்கும் பாலாவுக்கும் என்ன தான் பிரச்சனை? யார் மேல தப்பு? பிரபலம் சொல்ற தகவல்