சிக்கிய மனோஜ் - ரோகிணி... கடுப்பில் பாக்கியா... வேலைக்கு போன தங்கமயில்
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களில் நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்
சிறகடிக்க ஆசை
மனோஜை கூண்டுக்குள் நிற்க வைத்து முத்து இவன் அப்பா பணத்தை தூக்கிக்கிட்டு போய் ஒரு பொண்ணுக்கிட்ட கொடுத்தான். அந்த பொண்ணும் கனடா போச்சு. இதுதான் எல்லாருக்கும் தெரியுமே எனக் கேட்க, ஆனா அந்த பொண்ணு கிட்ட இருந்து மனோஜ் நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடியே மொத்த பணத்தையும் வாங்கிட்டான் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஆனால் மனோஜ் இல்லவே இல்லை இவன் பொய் சொல்றான் என சமாளிக்கிறார். ரோகிணி எப்படியோ உண்மையை தெரிந்துகிட்டான். ஆனா சாட்சி இருக்காது என நினைத்து தேவையில்லாம எங்க மேல பழி போடாதீங்க. உங்களிடம் சாட்சி இருக்கா எனக் கேட்க ஜீவா என இரண்டு முறை அழைக்கிறார்.
உள்ளே வரும் ஜீவாவை பார்த்து அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர் போலீஸில் அழைக்க வேண்டும் என்கின்றனர். எதற்கு என கேட்க எங்க பணத்தை நீதானே எடுத்துட்டு போன என்கின்றனர். நான் அதை மனோஜிடம் நாலஞ்சு மாசத்துக்கு முன்னரே கொடுத்து விட்டதாக கூறி போலீசில் எழுதி வாங்கிய பேப்பரையும், அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் போடுகிறார். இதை பார்க்கும் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியலட்சுமி
ஈஸ்வரி மூவருக்கும் சாப்பாடு ஊட்டிவிட்டு கொண்டு இருக்கிறார். வீட்டில் பாக்கியா ஜெனி மற்றும் செல்வியிடம் புலம்பி கொண்டு இருக்கிறார். எழில் அவன் அம்மாக்கும், மனைவிக்கும் எப்படி சரியா பேலன்ஸ் செய்றான். இவர் ஏன் இப்படி இருக்காரு என்கிறார்.
ஜெனி அப்போ செழியனும் இப்படி பண்ணுவானோ என புலம்புகிறார். ராதிகாவிடம் அவர் அம்மா கோபி குறித்து புலம்பி கொண்டு இருக்கிறார். ஈஸ்வரியுடன் மூவரும் கோயிலுக்கு வருகின்றனர். சாமி கும்பிட்டுவிட்டு இனி என்னை விட்டு நீ எங்கையும் போக கூடாது என ஈஸ்வரி சத்தியம் வாங்குகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்2
கதிர் வேலைக்கு கிளம்ப பார்க்க ராஜி அவரை ரெஸ்ட் எடுக்க சொல்கிறார். ஆனால் கேட்காமல் கதிர் கிளம்பி செல்கிறார். செந்தில் மற்றும் மீனா இருவரும் பாண்டியனிடம் பேசியது குறித்து பேசிக்கொண்டு செல்கின்றனர். மீனா செந்திலை எக்ஸாம் எழுதி பாஸ் செய்ய கூறுகிறார்.
தங்கமயிலை ஸ்கூலில் சேர்த்துவிட்டு சரவணன் கிளம்புகிறார். கோமதி வீட்டில் இருக்க அப்பத்தாவிடம் ஜாடையில் பேசிக்கொண்டு இருக்கிறார். பழனி வர அவர் கல்யாணம் குறித்து பாண்டியனிடம் அப்பத்தா பேசுகிறார்.
Also Read: கண்ணதாசனை வம்பிழுத்த எம்எஸ்வி... போட்டாரே ஒரு போடு அந்தப் பாட்டால...