திருந்தாத முத்து, மீனா… அடங்குங்க ஈஸ்வரி… கதிர் எடுத்த திடீர் முடிவு..
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
பாக்கியலட்சுமி
ராதிகா சென்ற புது வீட்டில் முகவரியை கோபி கேட்க அவர் தந்து விடுகிறார். பின்னர் கோபி சொல்லியும் கேட்காமல் ராதிகா கிளம்பி விட வீட்டிற்கு வருகிறார். அவரைப் பார்த்து ஈஸ்வரி மறுபடியும் சண்டை போட்டாலா நெஞ்சு வலிக்குதா என கேட்கிறார்.
இல்லம்மா அவ மேல எந்த தப்பும் இல்லை. அதை கேட்டதெல்லாம் நியாயம் இருக்கு என்கிறார். பாக்கியா, அவங்க மனசு உடைஞ்சு போயிருக்காங்க. இந்த நேரத்துல நீங்க அவங்க கூட தான் இருக்கணும். இதே செழியன் மற்றும் எழில் இதே மாதிரி செஞ்சா நீங்க ஒத்துப்பீங்களா.
இல்ல இனியாவ கல்யாணம் பண்ணிக்க போற பையன் இது மாதிரி விட்டுட்டு போனா உங்களால தாங்கிக்க முடியுமா என்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் கோபி ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு ராதிகாவை பார்த்து செல்கிறார். இதில் கடுப்பாகும் ஈஸ்வரி நீ நேரம் பார்த்து பழி வாங்குற என கூறுகிறார். நான் பழி வாங்கினா நீங்க தாங்க மாட்டீங்க அத்தை என்ன சொல்லிவிட்டு செல்கிறார் பாக்கியா.
சிறகடிக்க ஆசை
மனோஜ் கடையில் இருக்க அவரைப் பார்க்க முத்து வருகிறார். சாப்பாடு வாங்கிக் கொண்டு வர என்ன அக்கறை என கேட்கிறார் மனோஜ். இன்னும் கொஞ்ச நேரத்துல கடை இருக்காது. ஒழுங்கா வந்து சாப்பிடு எனக் கூற, மனோஜ் சாப்பிடுகிறார்.
என்கிட்ட தான் சொல்லலை. அப்பா அம்மா கிட்டையாவது சொல்லி இருக்கலாம் இல்ல. நீ கேட்டா அப்பாவே கொடுத்திருப்பார் என்கிறார். இப்படி பாசமா பேசி ஷோரூம் வாங்க பாக்குறியா என மனோஜ் கேட்க முத்து அதிர்ச்சி அடைகிறார்.
உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்தேனே? என்ன சாப்பிட்டியானு ஒரு வார்த்தை கேட்டியா? இப்படி கேவலமா பிடிங்கி திங்கிற அவசியம் எனக்கு கிடையாது. அவரை திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். மீனா ரோகிணிக்கு சாப்பாடு கொடுக்க இப்போ உங்களுக்கு சந்தோஷமா இருக்குமே என்கிறார்.
எனக்கு என்ன சந்தோஷம் என மீனா கேட்க ஆன்ட்டி இப்ப என்ன திட்டிக்கிட்டே இருக்காங்க. உங்க புருஷன் எங்களை குற்றவாளி மாதிரி எல்லாருக்கும் முன்னாடி நிக்க வச்சு அவ்வளவு கேள்வி கேட்டாரு எனக் கூற அவர் நீங்க செய்யாத எந்த தப்புக்கும் பேசல என திட்டிவிட்டு செல்கிறார் மீனா.
வாசலில் மீனா மற்றும் முத்து இருவரும் ரோகிணி மற்றும் மனோஜ் பேசியதை கூறி தங்களுக்கே திட்டிக் கொள்கின்றனர். இனி அவங்க ரெண்டு பேருக்கும் எந்த உதவியும் செய்யக்கூடாது எனவும் பேசிக்கொள்கின்றனர். மீனா வீட்டில் நடந்த விஷயங்களை அவர் அம்மாவிடம் மற்றும் சீதாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் சத்யா ரோகிணி சிட்டியிடம் அடிக்கடி கடன் வாங்கிய விஷயங்களையும் கூறுகிறார். இதைக் கேட்கும் மீனா அதிர்ச்சி அடைகிறார். ரோகிணி குறித்து ஒவ்வொரு விஷயமாக தெரியும் போது ரொம்பவே ஷாக்கா இருக்கு என்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
கதிர் மற்றும் ராஜி இருவரும் ஓட்டப் பந்தயம் ஓடுகின்றனர். முதலில் கதிர் ஜெயிப்பது போல இருந்தாலும் அவரை வேகமாக ஓடி ராஜி வெற்றி பெற்று விடுகிறார். பின்னர் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். தனக்கு போலீசாக வேண்டும் என்பதுதான் ஆசை என்கிறார் ராஜி.
உடனே கதிர் நீ போலீசாகு. யாரை பற்றியும் கவலைப்படாதே என நம்பிக்கை கொடுக்கிறார். வீட்டில் பாண்டியன் குடும்பத்தினருடன் உட்காந்து பழனிக்கு பெண் பார்க்கும் விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட அனைவரும் சந்தோஷமடைகின்றனர்.