மீனாவுக்கு புது சிக்கல்.. பாக்கியாவின் அதிரடி.. கவலையில் பழனிவேல்

by Akhilan |   ( Updated:2025-01-09 06:01:12  )
vijay serials
X

vijay serials

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: மனோஜ் ரோகிணியிடம் எதற்காக கடன் வாங்குன எனக் கேட்க நீ வேலை இல்லாமல் இருந்த அதற்காக வாங்கினேன். அவன் ரவுடி எல்லாம் இல்லை என்கிறார். சரி எவ்வளவு வாங்கி இருக்க எனக் கேட்க சொன்ன உடனே கடனை அடைச்சிடுவியா என்கிறார்.

இதில் மனோஜ் ஷாக்காகி ஜெர்க்காகி விடுகிறார். மீனா அந்த டிவி நடிகரை பார்க்க முத்துவையும் கையோடு அழைத்து செல்கிறார். அந்த நேரத்தில் அவரின் போட்டி பெண் வந்து பேச அவருக்கு தக்க பதிலடி கொடுக்கிறார் மீனா. கதிர் குறித்து சில ஆதாரங்களையும் திரட்டி இருக்கின்றனர்.

இதுகுறித்து மீனா மற்றும் முத்து இருவரும் அண்ணாமலையிடம் கூறிக் கொண்டிருக்கின்றனர். அவரின் சொந்த ஊர் ஏற்காடு என்பதை கூறி புகைப்படம் இருந்தால் இன்னும் ஈசியா இருக்கும் எனக் கூறுகிறார். மீனா கோயிலில் தான் பணம் கொடுத்தாங்க. அங்க சிசிடிவியில் பதிவாகி இருக்கும் என்கிறார். நான் வாங்கி தரேன் என மீனா கூற ரோகிணி மறுத்துவிடுகிறார்.

பாக்கியலட்சுமி: ஈஸ்வரி தன்னுடைய அம்மா மற்றும் செழியன், இனியாவுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்து பாக்கியா சிரிக்க ராதிகா கேள்வியாக நிற்கிறார். செல்வி இப்படி அம்மா சிரிச்சு பார்த்ததே இல்லை எனக் கூற அவங்க சிரிக்கலாம். ஆனா யாரும் சிரிக்க கூடாதுனு சொல்றது தப்புதானே என்கிறார்.

பின்னர், பாக்கியா மற்றும் மயூ, ஜெனியுடன் பேசிக்கொண்டு இருக்க எழில் மற்றும் அமிர்தா வருகின்றனர். அப்போ கோபி வர அவரை அங்கையே தங்க சொல்லி வற்புறுத்த பாக்கியா வேண்டாம் என்கிறார். பின்னர் மயூவை ராதிகா அழைத்து செல்கிறார்.

இரவில் பாக்கியா மற்றும் மயூ பேசிக்கொண்டு இருக்க ராதிகா என்னுடன் தூங்க வச்சிக்கவா எனக் கேட்க மயூவே மறுத்துவிடுகிறார். இரவில் கோபி தன்னுடைய அம்மாவுடன் படம் பார்த்துக்கொண்டு இருக்க ராதிகாவை போய் தூங்க சொல்கிறார்.

இதை காலையில் பெருமையாக ஈஸ்வரி சொல்லிக்கொண்டு இருக்க அப்போ கோபி வர பாக்கியா போட்ட காபியை கொடுத்து விடுகிறார். அதை குடித்த கோபி ஆஹாஓஹோ எனப் பாராட்ட ராதிகா ஷாக்காகி விடுகிறார். அவர்கள் சென்றதும் என் காபியை நீங்க ஏன் அவருக்கு கொடுத்தீங்க என திட்டிக்கொண்டு இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: முத்துவேல் தன் தம்பியை தங்களுடனே வந்து விட வேண்டும் என அழைக்க அவர் மறுத்துவிடுகிறார். பின்னர் பாண்டியன் மற்றும் கோமதி அவர்களை திட்டிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிடுகின்றனர். பழனி கவலையாக அமர்ந்து இருக்கிறார்.

கோமதி கவலையாக புலம்பிக்கொண்டு இருக்க பாண்டியன் இதை முன்னாடியே யோசிக்காம விட்டாச்சு. இப்படி அண்ணன்கள் செய்வானு நினைச்சிருக்கணும் என்கிறார். பழனி எனக்கு இனி கல்யாணமே வேண்டாம் எனக் கூற பாண்டியன் அவரை சமாதானம் செய்கிறார். கடையில் பழனி இருக்கும் போது சிலர் இதை கேட்க பாண்டியன் திட்டி அனுப்புகிறார்.

Next Story