பாக்கியாவின் முடிவு... பழனி பெண் பார்க்கும் படலம்... ரோகிணிக்கு சப்போர்ட் பேசும் பார்வதி

by Akhilan |
பாக்கியாவின் முடிவு... பழனி பெண் பார்க்கும் படலம்... ரோகிணிக்கு சப்போர்ட் பேசும் பார்வதி
X

Vijay serials: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை

மீனா தன்னுடைய டெக்கரேஷன் ஆர்டருக்காக மாடல் செய்து மண்டபத்திற்கு எடுத்து வருகிறார். அங்கு பழைய காண்ட்ராக்டர் பெண்மணி கூட்டம் மீனாவிடம் பிரச்சினை செய்கிறது. இன்னைக்கு நீங்க குப்பையில தூக்கி போட்டது நாளைக்கு கோபுரமா வரும் என மீனா அவர்களை திட்டி விட்டு சென்று விடுகிறார்.

பார்வதி விஜயாவை வீட்டிற்கு அழைத்து ரோகிணிக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். என்ன இருந்தாலும் ரோகினி பெரிய வீட்டு பொண்ணு. நாளைக்கு சொத்து வந்துட்டா மனோஜ் அந்த பக்கம் போயிடுவான். அதனால் அவளை மன்னிச்சிடு என்கிறார்.

இதை யோசித்துக் கொண்டு வீட்டுக்கு வரும் விஜயா அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.


பாக்கியலட்சுமி

கோபி நெஞ்சு வலிப்பது போல சொல்லிக் கொண்டிருக்க ஈஸ்வரி பதறிக் கொண்டிருக்கிறார். சமையலறைக்குள் இருக்கும் பாக்கியா இதை பார்த்து கடுப்பாக ஜெனி என்னவென்று கேட்கிறார். அவங்க அம்மா எதுவும் பேசாம இருக்கறதுக்காக வலிக்கிற மாதிரி நடிக்கிறார் என்கிறார்.

பின்னர் பாக்கியாவை பார்க்க ராதிகா வர தான் இந்த வீட்டிற்கு வந்தது குறித்து மன்னிப்பு தெரிவிக்கிறார். ஆனால் செல்வி நீங்க வந்தது அக்காவுக்கு சந்தோஷம்தான் எனக் கூறி விடுகிறார்.

கோபி பாக்கியாவிடம் மயூ மற்றும் ராதிகாவை அழைத்து வந்தது குறித்து கூற இங்க இருக்கலாம். ஆனா வாடகை கொடுக்கணும் என ஒரு குறைந்த தொகையை சொல்கிறார்.

ஈஸ்வரி மற்றும் செழியன் கோபம் அடைகின்றனர். கோபி மயூவை இனியா ரூமில் தூங்க சொல்ல இனியா மறுக்காமல் பாக்கியாவை மாட்டி விடுகிறார். பாக்கியா ஒப்புக்கொள்கிறார்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

பழனிக்கு அலங்காரம் செய்து செந்தில், சரவணன் மற்றும் கதிர் அழைத்து செல்கின்றனர். பழனி அம்மாவை பார்க்க விருப்பப்பட அவர் வராமல் வீட்டிற்குள்ளே இருக்கிறார். எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு பெண் பார்க்க கிளம்பி செல்கின்றனர்.

பழனியை உயர்த்தி பேசும் பாண்டியனை பார்த்து குடும்பமே ஆச்சரியப்படுகிறது. பார்க்க வந்த பெண் எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்க இருவரையும் தனியாக பேச சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

Next Story