இப்படி பொசுக்குனு சமாளிச்சிட்டீங்களே ரோகிணி... கேடியான ஈஸ்வரி கூட்டணி... மீனாவுக்கு மோதல்

by Akhilan |
சிறகடிக்க ஆசை - பாக்கியலட்சுமி
X

சிறகடிக்க ஆசை - பாக்கியலட்சுமி 

Vijay serials: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை

ரோகிணியை கோபத்தில் விஜயா அறைய நான் அப்படி செய்யவில்லை என்றால் மனோஜ் இன்னமும் பார்க்கில் படுத்து தான் இருந்திருப்பார். அதனால்தான் அந்த பணத்தை ஷோரூம் ஆரம்பித்தோம் என்கிறார். நீ அந்த காசை என்கிட்ட வந்து கொடுத்திருக்கணும் என விஜயா கூற நீங்களும் இன்னும் எதுமே பண்ணலையே ஆன்ட்டி என்கிறார்.

இதனால் விஜயா இன்னமும் கோபமாகி ரோகினியை அடிக்கப் பாய்கிறார். என் பையன் கையால் ஆகாதவனு சொல்லிக்கிட்டு இருக்காள் என்று ரோகிணியை திட்டுகிறார் விஜயா. ரோகிணி தனக்கு மனோஜ் சப்போர்ட் செய்வான் என அவரைப் பார்க்க அவர் கண்டுக்காமல் நிற்கிறார்.

அண்ணாமலை ரோகிணியை ரூம்குள் அனுப்பி விடுகிறார். மனோஜ் உள்ளே செல்ல அவரை ஹாலில் உட்கார வைத்து விடுகிறார் விஜயா. ரவி மற்றும் மனோஜ் இருவரும் இது குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். ஜீவாவும் சரி, பார்லர் அம்மாவும் சரி மனோஜை லாயக்கில்லாத முட்டாள் என கூறிவிட்டதாக சொல்லி கலாய்க்கிறார் முத்து.

இதில் கோபமாக ரூமிற்குள் வரும் மனோஜிடம் தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என ரோகிணி சத்தம் போடுகிறார். மனோஜ் எங்க அம்மா கிட்ட பேசினது தப்பு தானே என கூறுகிறார். இருவருக்கும் சண்டையாகி ரோகிணி வெளியில் சென்று விடுகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியாவிடம் அவரிடம் வேலை செய்த பெண் ஒருவர் வந்து வேலை கேட்டு செல்கிறார். அப்பொழுது பாக்கியாவும், கோபி சாரும் விரைவில் சேர போறாங்களாமே எனக் கேட்க அதிர்ச்சி ஆகிறார் பாக்கியா. ராதிகா வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அனுப்பிவிட்டு மயூ மற்றும் அவர் அம்மாவை கிளம்ப சொல்லிவிட்டு அந்த வீட்டில் தனியாக இருக்கிறார்.

கோபிக்கு கால் செய்ய முயற்சி செய்யும் பாக்கியா இனியாவுக்கு கால் செய்து அவரிடம் பேச வேண்டும் என கூறுகிறார். இதனால் இனியா அவர் ரூமுக்கு சென்று விட்டதாக பொய் கூறுகிறார்.

இதை ஈஸ்வரிடம் வந்து சொல்ல அவர் குலதெய்வம் கோயிலுக்கு வந்ததால் நல்லது நடந்திருக்கிறது. வீட்டிற்கு போகும் வரை யாரும் அவள் காலை எடுக்க கூடாது என கூறி விடுகிறார். ராதிகாவை வீட்டில் வந்து பார்க்கிறார் பாக்கியா. தங்களது பழைய ஞாபகங்கள் குறித்து இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

சரவணன் மற்றும் செந்திலுக்கு செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கோமதி பாண்டியனிடம் கூறுகிறார். ஆனால் அவரோ அப்படி கொடுத்தால் கெட்டுப் போயிடுவாங்க. தேவைப்பட்டால் என்னிடம் கேட்கலாம் என கூறுகிறார். சிசிடிவி மாட்ட ஆட்கள் வந்திருக்க அவர்களுக்கு இடத்தை காட்ட பாண்டியன் சென்று விடுகிறார்.

சக்திவேல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வர அங்கு மீனா இருக்கிறார். ஆக்கிரமிப்பு கடையை அகற்ற நோட்டீஸ் விட்டதில் இருவருக்கும் சண்டை தொடங்குகிறது. முடிஞ்சா காலி பண்ணுங்க இல்ல நாங்க பாத்துக்குறோம் என மீனா கூறி விடுகிறார்.

தங்கமயில் குழந்தைகளை சமாளிக்க முடியாமல் முதலில் திணற பின்னர் பாடல் சொல்லிக் கொடுத்து அவர்களை சமாளிக்கிறார். அதை பள்ளி முதல்வர் பார்த்து சந்தோஷம் அடைகிறார்.

செந்தில் மற்றும் பழனி கடையில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது வரும் பாண்டியன், மாமாவை அழைத்துக் கொண்டு வெளியில் செல்கிறார். கல்லாவிலிருந்து 500 ரூபாயை செந்தில் எடுத்து விடுகிறார்.

Also Read: கேப்டன் விஜயகாந்த் தவற விட்ட பிளாக்பஸ்டர் படங்கள்... லிஸ்ட்ல இவ்ளோ இருக்கா?

Next Story