பார்க்கிறவங்களை என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? கடுப்பேற்றும் விஜய் சீரியல்கள்… புரோமோவே மோசம்தான்!...
Vijay Serials: விஜய் சீரியல்களின் இந்த வார புரோமோ அப்டேட் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கடுப்பாகி கலாய்த்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி
மூன்று வருடமாக ஓடும் இந்த சீரியலில் ராதிகா வீட்டை காலி செய்து சென்றுவிட அவரை காண கோபி செல்கிறார். வீட்டில் இல்லாமல் வந்துவிட இனியாவை இப்படி கல்யாணம் பண்ணி விட்டுப்போனா சும்மா இருப்பீங்களா எனக் கேட்கிறார் பாக்கியா.
இதில் அதிர்ச்சியாகும் கோபி, பழைய வீட்டுக்கு ராதிகாவை காண செல்கிறார். அங்கு மயூவை ஆறுதல் படுத்துகிறார். ஈஸ்வரி வீட்டில் கோபப்பட்டு கொண்டு இருக்க என் பையன் வந்துடுவான் என்கிறார். அதுபோல கோபி வந்து வந்துட்டேன்மா எனக் கூறிக்கொண்டு ராதிகா மற்றும் மயூவை அழைத்து வந்துஇருக்கிறார். (ஒரு அளவுக்குதான் புரோ)
சிறகடிக்க ஆசை
30 லட்சத்தை ஏமாற்றிய ரோகிணியை கொடுமை மாமியாராக இம்சிக்கிறார் விஜயா. கதவை சாத்த விடாமல் டைனிங் டேபிளில் சாப்பிட விடாமல் தண்டனை கொடுக்க ரோகிணியும் மாமியாருக்கு கீழ் படிந்து அவர் சொல்வது போல கேட்டு நடக்கிறார். ( அப்ப மத்த பிரச்னை தெரிஞ்சா சோலி ஓவரா)
பாண்டியன் ஸ்டோர்ஸ்2
கதிர் மற்றும் ராஜி பேசிக்கொண்டு இருக்க நான் பெரிய தடகள வீராங்கனை என்கிறார். அப்போ ஓட்டப்போட்டியில் என்னை ஜெயிச்சு காமி என கதிர் சவால் விட ராஜியும் போட்டிப்போட்டு அவரை ஜெயிச்சு காட்டுகிறார். இதனால் அவரை யாருக்கும் கவலைப்படாதே போலீஸ் ஆகு என்கிறார். ( ரைட்டு 2 வருஷத்துக்கு கதை ரெடி)