டிஆர்பியில் அடி வாங்குவதை பழக்கமாக்கி கொள்கிறதா விஜய் டிவி?

இந்த வார டிஆர்பி அப்டேட்டில் பெரிய மாற்றம் ஏற்படாமல் இருப்பதே அதிர்ச்சிதான்.
 
vijay tv

VijayTV: சீரியல்களின் டாப் வரிசைக்கான டிஆர்பியை வாரா வாரம் ரிலீஸ் செய்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரிஜினல் சீரியல்களை எடுத்து வருகிறது. அதன் முன்னர் நார்த் இந்தியாவில் ஒளிபரப்பான சீரியல்களை டப் செய்யதே ஒளிபரப்பும். இதனால் அதற்கு ரசிகர்கள் அதிகம். 

இதை தொடர்ந்து அடுத்தடுத்த ஒரிஜினல் சீரியல்களுக்கும் ரசிகர்கள் அதிகமாகினர். பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா என பல சீரியல்கள் வந்து அது சமூக வலைத்தளம் மூலம் பிரபலமும் ஆனது. 

இதனால் தனி தொலைக்காட்சியாக டிஆர்பியில் கெத்து காட்டிய சன் டிவிக்கு பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்தது. தொடர்ந்து பல சீரியல்கள் வெளியாகி டிஆர்பியில் சக்கை போடு போட்டது. இதனை தொடர்ந்து டாப் இடத்தினையும் பிடித்தது. 

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை தற்போது கதை சரியாக செல்லாததால் ஐந்தாம் இடத்தினையே பிடித்து இருக்கிறது. எப்போதும் போல சன் டிவி சீரியல்களே முதல் நான்கு இடத்தையும் பிடித்து இருக்கிறது. 

அய்யனார் துணை, சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியல்களும் அவ்வப்போது டாப் 10க்குள் வந்தாலும் ஐந்தாம் இடத்தினை தாண்டி உள்ளையே செல்ல முடியவில்லை. இதில் சன் டிவி ஸ்ட்ராங்கா இருக்கா இல்லை விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் மொக்கை வாங்கும் அளவுக்கு எடுக்கிறார்களா என ரசிகர்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இயக்குனர்கள் ரூட்டை மாற்றினால் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள். 

From Around the web