திடீரென தற்கொலை செய்துக்கொண்ட விஜே சித்ராவின் தந்தை… மீண்டும் பரபரப்பு…

by Akhilan |
விஜே சித்ரா
X

விஜே சித்ரா 

Vj Chitra: விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளனியாக இருந்த விஜே சித்ராவின் தந்தை திடீரென நான் தங்கி இருந்த குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டு இருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமாக இருந்து வந்தவர் விஜே சித்ரா. வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தவருக்கு நாயகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருந்தார்.

தாய் தந்தைக்கு சொந்தமாக வீடு கட்டி தன்னுடைய வருங்கால கணவரையும் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுவரை எல்லாமே நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், நள்ளிரவு வரை சூட்டிங்கில் இருந்து வந்த சித்ரா திடீரென 2020ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இது குறித்து மர்மங்கள் விலகாமலே இருந்தது. அவரின் வருங்கால கணவர் ஹேமந்த் மீது சித்ராவின் தந்தை காமராஜ் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ஹேமந்த் கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து நடந்து வந்த வழக்கு விசாரணையில் ஹேமந்த் நிரபராதி என கடந்த ஆகஸ்ட் மாதம் திருவள்ளூர் விரைவு மகிலா நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து தற்போது தான் குடியிருந்த திருவான்மியூர் வீட்டில் சித்ராவின் தந்தை காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இன்று அதிகாலை அவரை காண வந்த உறவினர்கள் கதவை தட்டியும் அவர் திறக்காததால், உடைத்து பார்த்தபோது இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. ஓய்வு பெற்ற உதவி காவல்துறை அதிகாரியாக இருந்த காமராஜ். மகளின் இறப்புக்கு பின்னர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Next Story