மீண்டும் ஆரம்பமாகிறது டான்ஸ் ஜோடி டான்ஸ்: இந்த முறை நடுவர்கள் யார் தெரியுமா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரர்வேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது இந்த ரியாலிட்டி ஷோவின் புதிய சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்களுக்கு சீரியல்களைத் தாண்டி வார இறுதி நாட்களைக் கலர்ஃபுல்லாக மாற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதிலும் குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில், கடந்த சீசன்களில் ஹிட் அடித்த ஜீ தமிழின் ஃபேவரிட் நடன நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் புத்தம் புதிய சீசனுடன் மீண்டும் களம் இறங்கத் தயாராகிவிட்டது.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த புதிய சீசன், வரும் ஜூன் 13-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு இந்த பிரம்மாண்ட நடனத் திருவிழா நடைபெற உள்ளது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதற்கான பிரத்யேக ஆடிஷன்கள் நடத்தப்பட்டு, அதில் மிகச்சிறந்த திறமையுள்ள நடனக் கலைஞர்கள் மட்டுமே முதன்மை மேடைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புதிய சீசனின் நடுவர்களாக வெள்ளிதிரையின் சூப்பர்ஹிட் ஜோடியான பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடுவர்களாக களமிறங்க உள்ளார்கள். அதற்கான ப்ரமோவும் வெளியாகி உள்ளது.
