ஸ்ரீதேவியோட ஏன் நடிக்கல?... நக்கலாக பேசிய பாலகிருஷ்ணா
மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவியுடன் ஏன் ஜோடியாக நடிக்கவில்லை என்பதற்கான காரணத்தினை நடிகரும், எம்எல்ஏ-வுமான நந்தமூரி பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
64 வயதிலும் ஆக்ஷன் படங்களில் நடித்து கலக்கி வருபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், " ஸ்ரீதேவி என்னுடைய தந்தை என்டிஆருடன் இணைந்து நடித்திருந்தார். ஆனால் நானும், அவரும் இணைந்து நடித்ததில்லை.
என்னுடைய படங்களுக்கு அவர் தேவைப்படவில்லை. அதனால் அவருடன் நடிப்பது குறித்து நான் யோசிக்கவில்லை. என்னுடைய தந்தையுடன் ஸ்ரீதேவி நடித்தபோது நடனக்காட்சிகளில் அடிப்பது போன்ற விஷயங்களை அவர் செய்தார்.
அவரின் இந்த கடுமையான அப்ரோச் தான் ஸ்ரீதேவி போன்ற நடிகைகளின் நடிப்புத்திறனை வளர்த்துக்கொள்ள உதவியாக இருந்தது," என நக்கலாக பேசியுள்ளார்.
நந்தமூரி பாலகிருஷ்ணா தன்னுடைய நடவடிக்கைகளால் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, லைம்லைட்டிலேயே இருப்பவர் என்பதை இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.