தலைவர் 170-ல் களமிறங்கும் மாஸ் வில்லன்!.. அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு மக்களே!..

Published on: September 5, 2023
jailer
---Advertisement---

ரஜினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆரம்பத்தில் நடத்துனராக பணிபுரிந்த இவர் பின் தனது கடின உழைப்பால் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் இவருடன் இணைந்து உலகாநாயகனும் நடித்துள்ளார். இவரின் ஸ்டைலுக்கே பல ரசிகர் பட்டாளம் உண்டு.

வருடத்திற்கு 10க்கும் மேல் படங்களை நடித்து சினிமா துறையில் தனக்கென தனி பெயரை சம்பாதித்து கொண்டார். இவர் தில்லுமுல்லு, படையப்பா, சிவாஜி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடித்தால் அப்படம் வெற்றிதான் என எண்ணும் அளவிற்கு பெரிய நடிகராக வளர்ந்துள்ளார். இவர் தனது படங்களுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதையும் வாசிங்க: டைகர் கா ஹுகும்!.. சூப்பர்ஸ்டார் மாதிரியே ட்ரை பண்றாரா லிட்டில் சூப்பர்ஸ்டார்!.. தீயாய் பரவும் போட்டோஸ்!..

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்த எந்திரன் திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படமும் இவருக்கு வெற்றி படமாகவே அமைந்தது. இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் இவரின் சிஷ்யன் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜெய்லர். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படமானது பல கோடிக்கு வசூலை அள்ளியது. மேலும் உலகளாவிய அளவில் வெற்றியையும் பெற்றுள்ளது. இன்னமும் பல திரையரங்குகளில் இப்படம் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

இதையும் வாசிங்க: ஜெயிலர் இவ்வளவு ஹிட் ஆனதுக்கு 4 விஷயம்தான் காரணம்!.. புட்டு புட்டு வைக்கும் திரையுலகம்….

தற்போது ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படபிடிப்புகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளன. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் போலிஸாக நடிக்க உள்ளார். மேலும் இப்பட்த்தில் அமிதாப் பச்சான், மஞ்சு வாரியார், பகத் ஃபசில் போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர். இப்படத்தினை விரைவாக முடிக்கும்படி படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தினை ஜெய்பீம் பட இயக்குனரான டி.ஜே.ஞானவேல் இயக்க உள்ளார் மற்றும் லைக்கா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளனர். தற்போது இப்படத்தினை பற்றிய புதிய தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் வில்லனாக பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ரானா டகுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலி படத்தில் இவரின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. தலைவரோடு இவரின் நடிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் வாசிங்க: ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக இருந்த விஜயகாந்த்! கேப்டனுக்கு பின்னாடி இப்படி ஒரு வெறியனா?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.