ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோயின்.. ப்ளாஷ்பேக் பார்த்தால் இவர் செட்டாவாரானு தெரியலயே?

jason
கனடாவில் தன் படிப்பை முடித்த கையோடு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தார் விஜய் மகன் ஜேசன் சஞ்சய். சென்னை வந்து அடைந்ததுமே லைக்கா நிறுவனத்துடன் ஒரு புதிய படத்திற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார் .அதனால் அந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. முதல் படமே பெரிய நிறுவனத்துடன். அதனால் சஞ்சய் மீது ஒட்டுமொத்த திரையுலகின் கவனமும் திரும்பியது.
ஆனால் கையெழுத்தானதுடன் சரி படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது .கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தான் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு வடசென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.
படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இப்போது இந்த படத்தின் ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது .ஆக்சன் பின்னணியில் இந்த படத்தின் கதை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் கதாநாயகியாக ஃபரியா அப்துல்லா என்ற நடிகை நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே தெலுங்கில் இரு படங்களில் நடித்தவர்.
ஆனால் தமிழில் விஜய் ஆண்டனி உடன் வள்ளிமயில் என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் தான் வள்ளிமயில். அந்த படத்தின் டீசர் மட்டுமே வெளியாகியிருக்கிறது. இன்னும் படம் ரிலீஸாகவில்லை. கூடிய சீக்கிரம் வள்ளி மயில் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது .

faria
அதனால் ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படத்தில் ஃபரியா அப்துல்லா ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று தெரிந்ததுமே ரசிகர்கள் முதல் படமே காத்திருப்பு பட்டியலில் இருக்க இப்போது இந்த இரண்டாம் படத்தில் இவர் இணைந்திருப்பது அவருடைய ராசியை குறிப்பிட்டு ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.